திரிணமூல் பிரமுகர் ஷாஜகானை கைது செய்யாதது ஏன்? – கொல்கத்தா உயர் நீதிமன்றம் கேள்வி

கொல்கத்தா: சந்தேஷ்காலி தீவுப்பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கும்படி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக எம்எல்ஏ சங்கர் கோஷ் ஆகியார் தாக்கல் செய்த மனு கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சிவஞானம் முன்னிலையில் நேற்று விசாரைணக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது: சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் மீதுபாலியல் புகார் கூறியுள்ளனர். அங்கு அவர் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அத்தகைய நபர் தலைமறைவாக … Read more

1,200 டிராக்டர்கள், 300 கார்களுடன் டெல்லி எல்லையில் 14,000 விவசாயிகள்: தயார் நிலையில் போலீஸ்

Farmers Protest: காவல்துறை மூலம் போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றுவதற்காக போராட்டக்காரர்கள் பெரிய லாரிகள், புல்டவுசர்கள், டிராக்டர்கள் ஆகியவற்றை தயாராக வைத்துள்ளனர். 

2023 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை கட்டப்பட்ட 43% நெடுஞ்சாலைகள் 4 வழிச் சாலைகள்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரை கட்டப்பட்ட நெடுஞ்சாலைகளில் 4 வழி மற்றும் அதற்கு மேற்பட்ட வழி நெஞ்சாலைகளின் பங்கு இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. 2023-24-ல் கட்டப்பட்ட அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் கிட்டத்தட்ட 43% இந்தப் பிரிவின் கீழ் வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறும்போது, “4, 6 மற்றும் 8 வழிச் சாலைகளின் பங்கு ஓராண்டுக்கு முன்பிருந்ததை விட 16% அதிகரித்து 3,297 கி.மீ. ஆக உள்ளது. இந்த நிதியாண்டில் எஞ்சிய … Read more

காஷ்மீரில் ரூ.32,000 கோடி திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

ஜம்மு: தமிழகத்தில் ஐஐஐடி-டிஎம்மில் புதிய வளாகம், ஜம்மு-காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் கல்வி, ரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலைகள் உள்ளிட்ட துறைகளில் ரூ.32,000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை நேற்று ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 1,500 அரசு ஊழியருக்கான பணி நியமனக் கடிதங்களையும் பிரதமர் மோடி வழங்கினார். விக்சித் பாரத்”, … Read more

2018-ம் ஆண்டு அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்: உ.பி. நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: கடந்த 2018-ம் ஆண்டு பாஜக பிரமுகர் தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்ட நீதின்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பிப்.20-ம் தேதி நேரில் ஆஜராகும் படி, சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி … Read more

“உண்மையை தெரிந்துகொள்ள உதவும்” – ‘ஆர்டிகிள் 370’ படத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஸ்ரீநகர்: ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘ஆர்டிகிள் 370’ திரைப்படம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி மவுலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். தனது உரையின் இடையே, இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘ஆர்டிகிள் 370’ படத்தைப் பற்றி குறிப்பிட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “ஒரு காலத்தில் ஜம்மு – காஷ்மீரில் பள்ளிகள் … Read more

சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகளும் செல்லும்: மறு எண்ணிக்கைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான வழக்கில், ”செல்லாது என அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லும். அனைத்து வாக்குகளையும் மீண்டும் எண்ணி, அதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா … Read more

“கொஞ்சம் பொழுது போகும்….” – தலைமை நீதிபதி பகடி @ சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்கு எண்ணும் வீடியோவை ஒளிபரப்பச் சொல்லி, “அனைவரும் இதனைக் கண்டு கொஞ்சம் பொழுது போக்கலாம்” என கிண்டல் தொனியில் பேசியதால் நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது. சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் … Read more

Driving Licence: ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு..!

சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சாரதி போர்டலில், 2024 ஜனவரி 31ஆம் தேதி முதல், 2024 பிப்ரவரி 12ஆம் தேதி வரை, சிக்கல்கள் காணப்பட்டன. இதனால் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க விண்ணப்பிக்க முயன்றவர்கள், உரிமம் தொடர்பான சேவைகளை பெறுவதில், பெருத்த இடையூறுகளை எதிர்கொண்டனர்.

“சந்தேஷ்காலியில் நிலைமை பயங்கரம்” – நேரில் பார்வையிட்ட பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிர்ச்சி

சந்தேஷ்காலி: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலிக்குச் சென்று பார்வையிட்ட பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, நிலைமை மிக மிக மோசமாக உள்ளது என்றும், சட்டம் – ஒழுங்கு முற்றிலுமாக இல்லை என்றும் கூறினார். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்தேஷ்காலியில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய … Read more