இண்டியா கூட்டணியில் முடிவடையும் தருவாயில் தொகுதிப் பங்கீடு: காங்கிரஸ்

புதுடெல்லி: இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடையும் தருவாயில் உள்ளதாக காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழுவை, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். அந்தக் குழு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடனும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாகவும் தீவிரமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அது முடிவுக்கு … Read more

சண்டிகர் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வெற்றி என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

Chandigarh Mayor Polls Result: சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி – தேர்தல் அதிகாரி மீது வழக்குப் பதிய உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவின் எதிரொலியாக, சண்டிகர் மேயர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும், … Read more

Rajya Sabha Election: சோனியா காந்தி ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

Rajya Sabha Election 2024: முதல்முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 5 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ம.பி காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கமல்நாத் பங்கேற்பு

போபால்: பாஜகவில் இணையப் போவதாக வெளிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, போபாலில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கமல்நாத் கலந்துகொண்டார். மத்தியப் பிரதேசத்தில் நடக்க இருக்கிற இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை தொடர்பாக இந்தக் கூட்டம் நடந்தது. கமல்நாத்துடன் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையப் போகிறார் என்ற ஊகங்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த … Read more

Maratha Reservation Bill: மகாராஷ்டிரா சட்டசபையில் மராத்தா இடஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

Maratha Reservation Bill: மராட்டிய இடஒதுக்கீடு மசோதாவுக்காக மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மராத்தா இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது.

ஜம்மு காஷ்மீர் | ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 32,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார். மேலும், ஜம்மு காஷ்மீரில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 1,500 பேருக்கு பணி … Read more

‘MSP குழப்பத்தைப் பரப்புவோர் எம்.எஸ்.சுவாமிநாதனை அவமதிக்கிறார்கள்’ – ராகுல் சாடல்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை சாடியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து குழப்பத்தை பரப்புகிறவர்கள், பசுமைப் புரட்தி தந்தை பாரத ரத்னா டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனை அவமதிக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார். பருப்பு வகைகள், மக்காச்சோளம், பருத்தியை அரசு நிறுவனங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஐந்து ஆண்டுகளுக்கு வாங்கும் மத்திய அரசின் முன்மொழிவை விவசாயிகள் மறுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. … Read more

ஜெயலலிதா நகைகளை ஒப்படைக்க ரூ.5 கோடி: தமிழக அரசுக்கு பெங்களூரு கோர்ட் உத்தரவு

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்க‌ளை மார்ச் 6-ம் தேதி தமிழக‌ அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991 96ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தமிழக லஞ்ச‌ ஒழிப்புத் துறை போலீஸார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய … Read more

மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்: நாளை டெல்லி பேரணி

Farmers Protest: மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் அடங்கிய குழு, சண்டிகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நான்காவது சுற்று பேச்சுவார்த்தையின் போது விவசாயிகளிடம் எம்எஸ்பி குறித்த ஒரு  திட்டத்தை முன்வைத்தது.