வயநாட்டில் யானை தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் ஆறுதல்

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். உத்தர பிரதேசம் மாநிலத்தின் வாராணசியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேசிய ஜோடோ நியாய யாத்திரையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, கேரளாவின் வயநாட்டில் போராட்டம் நடைபெற்றது. வனவிலங்குகள் மனிதர்களை அடிக்கடி தாக்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணகோரி, நேற்று முன்தினம் கடையடைப்பு நடத்தப்பட்டது. சாலை … Read more

பிஎஃப்ஐ உறுப்பினர்களை அரசு பயன்படுத்துகிறது: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் புகார்

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கும் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பல்கலைக்கழகங்களை ஆளுநர் காவிமயமாக்க முயன்று வருவதாக கூறி, அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் (எஸ்எப்ஐ) அண்மைக்காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் திருவனந்தபுரத்தில் ஆளுநருக்கு எதிராக நேற்றும் கருப்புக்கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறும்போது, “கொல்லம் நிலமேலியில் அண்மையில் எனக்கு எதிராக எஸ்எப்ஐ நடத்திய போராட்டம் தொடர்பாக … Read more

இறக்கும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட சமண மடாதிபதி ஆச்சார்ய வித்யாசாகர் மகராஜ் மறைவு

புதுடெல்லி: சமண மடாதிபதி ஆச்சார்ய வித்யாசாகர் மகராஜ் நேற்று அதிகாலை மறைந்தார். இதுகுறித்து சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டம் டோங்கர்கரில் உள்ள சந்திரிகிரி தீர்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமண மடாதிபதி ஆச்சார்ய வித்யாசாகர் மகராஜ், டோங்கர்கரில் உள்ள சந்திரிகிரி தீர்த்தில் கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். கடந்த 3 நாட்களாக ‘சலேகானா’ என்ற இறக்கும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மத வழக்கத்தை கடைபிடித்தார். … Read more

MSP விவகாரம்: ‘மத்திய அரசின் முன்மொழிவை நிராகரிக்கிறோம்’ – விவசாய அமைப்புகள்

சண்டிகர்: வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த மத்திய அரசின் புதிய முன்மொழிவை நிராகரிப்பதாக விவசாய அமைப்புகள் கூட்டாக இணைந்து தெரிவித்துள்ளன. அதோடு 21-ம் தேதி தங்களது ‘டெல்லி சலோ’ பேரணி மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விவசாய சங்கத்தினர் மத்திய அரசுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில் ஒப்பந்த அடிப்படையில் வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகளிடம் முன்மொழிந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இது குறித்து … Read more

ஜேஎம்எம் – காங்கிரஸ் இடையே எந்த பிரச்சினையும் இல்லை: ஜார்க்கண்ட் முதல்வர் சம்பய் சோரன் தகவல்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) மற்றும் காங்கிரஸ்இடையே எந்த பிரச்சினையும் இல்லை; காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அதன் உட்கட்சி விவகாரம் என ஜார்க்கண்ட் முதல்வர் சம்பய் சோரன் கூறியுள்ளார். ஜார்க்கண்ட்டில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நில ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது கட்சியைச் சேர்ந்த சம்பய் சோரன் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவருடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த ஒருவரும் … Read more

370 தொகுதிகளில் வெற்றி பெற அடுத்த 100 நாட்களும் உத்வேகத்துடன் பணியாற்றுங்கள்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 370 தொகுதிகளில் நாம் வெற்றி பெற, அடுத்த 100 நாட்களும் உத்வேகம், நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் கட்சித் தலைவர் நட்டா தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், தேசிய நிர்வாகிகள், மாநில, மாவட்டத் தலைவர்கள், அணி தலைவர்கள், தேசிய செயற்குழு நிர்வாகிகள் என 11,500 பேர் பங்கேற்றனர். … Read more

பாகிஸ்தான் பொருளாதாரத்தை விஞ்சிய ‘சில’ டாப் இந்திய நிறுவனங்கள்..!

Top 10 Indian companies: தெற்காசியாவில் உள்ள பாகிஸ்தான் உட்பட சில நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட, இந்தியாவில் உள்ள சில இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

“கட்சியிலில் இருந்து விலகமாட்டார்: காங்கிரஸின் தூண் கமல்நாத்” – திக்விஜய் சிங்

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத்தின் மகன் நகுல்நாத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுயவிவரக் குறிப்பில் இருந்து காங்கிரஸ் கட்சி என்ற அடையாளத்தை நீக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் தனது தந்தையுடன் பாஜகவில் இணையக்கூடும் என்ற செய்திகள் வெளியானது. இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியது: கமல்நாத் தனது அரசியல் பயணத்தை நேரு-காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொடக்கியவர். அப்படிப்பட்டவர் காங்கிரஸ் குடும்பத்தை விட்டு பிரிவார் … Read more

கடந்த தேர்தலில் தோற்ற தொகுதிகளான 161-ல் வெற்றி லட்சியம்; 67 நிச்சயம் – பாஜக வியூகம்

புதுடெல்லி: பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நாடு முழுவதும் இருந்து 11,500 பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இரு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. வரும் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உறுதிபட கூறி வருகின்றனர். இதற்காக பூத் வாரியாக தீவிரவாக … Read more

ராஜஸ்தான் காங். பழங்குடியின தலைவர் மகேந்திரஜீத் மாளவியா பாஜகவில் ஐக்கியம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழங்குடியின தலைவர் மகேந்திரஜீத் மாளவியா பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், மகேந்திரஜீத் மாளவியா பாஜகவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைவிட பாஜக செல்வாக்காக உள்ள பகுதி தெற்கு ராஜஸ்தான். இந்த பகுதியில் உள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின தலைவரான மகேந்திரஜீத் மாளவியா, இந்த மாவட்டத்தில் உள்ள பகிதோரா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2008-ல் முதல்முறை எம்எல்ஏ-வாக தேர்வான … Read more