காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டம் 370, 35-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலமும் 2 ஆக பிரிக்கப்பட்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வரலாம், அவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என கருதியதால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. பொது போக்கு வரத்தும் நிறுத்தப்பட்டது. கலவரங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு … Read moreகாஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி மாணவர்கள் 5 பேர் பலி | Electricity kills 5 students in Karnataka

கர்நாடகா: கர்நாடக மாநிலம் கோப்பில் நகரில் தேசியக்கொடியை கம்பத்திலிருந்து இறக்கிய போது மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் உயிரிழந்தனர். அரசுப்பள்ளி மாணவர்கள் 5 பேர் இன்று காலை தேசியக்கொடியை இறக்கிய போது அருகே இருந்த மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியது. உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் தரப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

’என் மனைவி மனித வெடிகுண்டு’: ஏர்போர்ட்டுக்கு போன் செய்த சென்னை இளைஞருக்கு டெல்லியில் சிறை!

’என் மனைவி மனித வெடிகுண்டு, நடுவானின் விமானத்தை தகர்க்கப் போகிறார்’ என்று சொன்ன சென்னை இளைஞர், டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த 10 வருடமாக தோல் தொழிற்சாலை நடத்தி வருபவர் நஸ்ருதீன். பீகாரைச் சேர்ந்தவர். அவரது தொழிற்சாலையில் சபீனா என்பவர் வேலை பார்த்தார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சபீனா மீது காதல் கொண்ட நஸ்ருதீன், அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவரை வற்புறுத்தி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வைத்தார். … Read more’என் மனைவி மனித வெடிகுண்டு’: ஏர்போர்ட்டுக்கு போன் செய்த சென்னை இளைஞருக்கு டெல்லியில் சிறை!

கர்நாடகாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகள்… பெங்களூரு முழுவதும் போலீஸ் குவிப்பு..!

கர்நாடகாவில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அங்கு மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, பெங்களூருவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் உள்ள சட்டப்பேரவை,  கர்நாடக உயர்நீதிமன்றம், விமான நிலையம், ரயில்நிலையம் உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட அதிகளவில் போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை வரும் 20ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட … Read moreகர்நாடகாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகள்… பெங்களூரு முழுவதும் போலீஸ் குவிப்பு..!

கேரளாவில் மழை வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி – மாதா அமிர்தானந்தமயி

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஆகஸ்டு மாதத்தின் முதல் வாரத்தில் மிக தீவிரமாக பெய்த மழை வடகேரளத்தின் 5 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 111 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் மண்ணுக்குள் புதைந்த 40 பேர் கதி என்ன? என்பது தெரியவில்லை. இவர்களும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்போது பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். … Read moreகேரளாவில் மழை வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி – மாதா அமிர்தானந்தமயி

இறந்தவர்கள் உடல்கள் பள்ளிவாசலில் பிரேத பரிசோதனை பஸ் நிலையத்தில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் | Bodies of the dead were Muslims who prayed at the post-mortem bus station

திருவனந்தபுரம்: கேரளாவின் கவளப்பாறையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய பள்ளிவாசலில் இடம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பஸ் ஸ்டாண்டில் தொழுகை நடந்தது. கேரளாவில்  பெய்த கோர மழைக்கு மலப்புரம்  மாவட்டம் கவளப்பாறையில்  ஏற்பட்ட  நிலச்சரிவில்  59 பேர் சிக்கியிருக்கலாம்  என அஞ்சப்படுகிறது.  இதுவரை  அங்கிருந்து 31  உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் உருக்குலைந்து  காணப்பட்டதால் பிரேத  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு   கொண்டு செல்வது இயலாத  காரியமாக இருந்தது. இதையடுத்து அருகில் உள்ள மஸ்ஜித்துல் முஜாகிதீன்   பள்ளிவாசலில் … Read moreஇறந்தவர்கள் உடல்கள் பள்ளிவாசலில் பிரேத பரிசோதனை பஸ் நிலையத்தில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் | Bodies of the dead were Muslims who prayed at the post-mortem bus station

போலீசார் கைது செய்ய வந்தபோது ‘ஏகே.47’ எம்.எல்.ஏ தப்பியோட்டம்!

வீட்டில் ஏகே 47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த சுயேச்சை எம்.எல்.ஏ, போலீசார் கைது செய்ய வந்தபோது தப்பியோடினார்.  பீகார் மாநிலம் மோகாமா ( Mokama) தொகுதி எம்.எல்.ஏ ஆனந்த் குமார் சிங். சுயேச்சை எம்.எல்.ஏவான இவரது மூதாதையர் வீடு, அதே மாவட்டத்தின் லட்மா கிராமத்தில் உள்ளது. அங்கு ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 26 தோட்டாக்களுடன் கூடிய ஏ.கே.47 துப்பாக்கி, 2 வெடிகுண்டுகள் ஆகியவற்றை … Read moreபோலீசார் கைது செய்ய வந்தபோது ‘ஏகே.47’ எம்.எல்.ஏ தப்பியோட்டம்!

இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?

இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன? எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (18.08.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (18.08.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை … Read moreஇந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?

அருண் ஜெட்லி கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது நிதி மந்திரியாக இருந்தவர் அருண்ஜெட்லி. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அருண்ஜெட்லி போட்டியிடவில்லை. கடந்த 9-ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். முதலில் பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் அங்குசென்று … Read moreஅருண் ஜெட்லி கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்?: உயிர்காப்பு கருவிகள் பொருத்தப்பட்டது | Former Union Finance Minister Arun Jaitley’s health continues to be a concern

டெல்லி: டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது. அவருக்கு உயிர்காப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையில் பாஜ அரசு கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட  நடவடிக்கைகளை  பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமல்படுத்தியவர். அண்மைக்காலமாக ஜெட்லி … Read moreமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்?: உயிர்காப்பு கருவிகள் பொருத்தப்பட்டது | Former Union Finance Minister Arun Jaitley’s health continues to be a concern