பாஜகவின் கேரள ‘நம்பிக்கை’… யார் இந்த அனில் அந்தோணி? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், 195 பேர் அடங்கிய பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனில் அந்தோணி குறித்து பார்ப்போம். கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி மகனான அனில் அந்தோணி, மத்திய கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார். தந்தை ஏ.கே.அந்தோணி காங்கிரஸின் முன்னாள் முதல்வராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் வலம் வந்தவர். தீவிர காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து பாஜகவுக்கு … Read more

மக்களவைத் தேர்தல்: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்.. இவர்தான் முக்கிய வேட்பாளர்

Lok Sabha Elections 2024: ஏற்கனவே 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ், இன்று 43 தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

கமல்நாத், கெலாட் மகன்களுக்கு சீட் – காங்கிரஸின் 2-ம் கட்ட பட்டியலில் 43 வேட்பாளர்கள்!

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான 43 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் 2-ஆம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமல்நாத், அசோக் கெலாட் ஆகியோரின் மகன்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அசாம், ராஜஸ்தான், குஜராத், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்திருக்கிறார். இந்தப் பட்டியலின்படி, காங்கிரஸ் எம்.பி.கெளரவ் கோகோய் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் தொகுதியிலும், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் மகன் நகுல்நாத் மத்தியப் … Read more

கை சின்னத்தில் போட்டியிடப்போகும் காங்கிரஸ் வேட்பாளர்கள்! இரண்டம் கட்ட பட்டியல் வெளியானது!

Congress second list of candidates : காங்கிரஸ் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலில் முன்னாள் முதல்வர்களின் மகன்கலின் பெயர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

‘மத்திய அரசின் சாதுர்யம்’ – சிஏஏ அமலுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஐயுஎம்எல் முறையீடு

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் எனப்படும் சிஏஏ அமலாக்கத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முறையீடு செய்துள்ளது. அதில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமது தரப்பில் சிஏஏ-வுக்கு தடை கோரப்பட்டதாகவும், ஆனால் அப்போது மத்திய அரசு அந்தச் சட்டத்துக்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவே இல்லை எனக் கூறி தடையாணையை சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டுவிட்டு இப்போது சத்தமே இல்லாமல் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 250 … Read more

பிரதமர் மோடியின் அருணாச்சல் பயணத்துக்கு எதிரான சீனாவின் கருத்துக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி: கடந்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசம் சென்றது குறித்து தூதரக ரீதியில் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனாவின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது. மேலும் “இத்தகைய வருகை மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமாகாது” என்றும் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், சீனாவின் கருத்துகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசம் சென்றது குறித்து சீனா தெரிவித்துள்ள … Read more

இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் விபத்து @ ராஜஸ்தான்

ஜெய்சால்மர்: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. மாணவர்கள் விடுதி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. நல்வாய்ப்பாக விமானி பத்திரமாக வெளியேறினார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப் படை தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானம் ஜெய்ஸால்மர் அருகே விபத்துக்குள்ளானது. பயிற்சியின் போது எதிர்பாராமல் இந்த விபத்து நடந்துள்ளது. விமானி பத்திரமாக உயிர் தப்பினார். … Read more

“இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து செய்யப்படும்” – காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

திருவனந்தபுரம்: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் தார்மீக ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தவறானது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இண்டியா கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வந்தால், இந்தச் சட்டத்தை சந்தேகத்துக்கு இடமின்றி திரும்பப் பெறுவோம். இது … Read more

ஹரியானா அரசியலில் திருப்பம்: கூட்டணி முறிவால் பாஜகவுக்கு பலன்? மீண்டும் முதல்வராகிறார் கட்டார்?

Manohar Lal Khattar Resigns: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்துள்ளனர். ராஜ்பவன் சென்று ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். 

சென்னை – மைசூரு உள்பட 10 புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) 10 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையும் அடங்கும். மேலும், பல்வேறு ரயில்வே சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரயில்வே உள்கட்டமைப்பு, தொடர்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையை ஊக்கப்படுத்தும் வகையில், அகமதாபாத்தில் உள்ள டிஎஃப்சியின் கட்டுப்பாட்டு மையத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, … Read more