ஹரியாணா பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நயாப் சைனி வெற்றி

சண்டீகர்: ஹரியாணா மாநில சட்டபேரவையில் புதன்கிழமை நடந்த சிறப்பு கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய முதல்வர் நயாப் சைனி வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது அமைச்சரவையுடன் செவ்வாய்க்கிழமை காலை ராஜினாமா செய்தார். தொடர்ந்து மாநிலத்தின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலையில் ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் மாநிலத்தின் புதிய முதல்வர் நயாப் சிங் சைனி பதவி ஏற்றுக்கொண்டார். தனக்கு 48 எம்எல்ஏக்களின் … Read more

தேர்தல் பத்திர விவகாரம் | உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல்

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இன்று (புதன்கிழமை) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாகவும், பென் டிரைவில் இரண்டு கோப்புகளாக தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் … Read more

குடியுரிமை திருத்தச் சட்டம்: 'உரிமைகள் பறிப்பு' பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்

Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் கூறியது என்ன? தெரிந்துக்கொள்ளுவோம்.

ராகுலின் அரசியல் எதிரி யார்? – வயநாடு தொகுதி வேட்பாளர் ஆனி ராஜா நேர்காணல்

வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதன் மூலம் தமது அரசியல் எதிரி யார் என்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று வயநாடு தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா குற்றம்சாட்டியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவிய ராகுல் காந்தி, கேரளத்தின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வீத்தினார் ராகுல். வரப்போகும் மக்களவைத் தேர்தலிலும் வயநாடு … Read more

எடியூரப்பா மகன் Vs பங்காரப்பா மகள்: ஷிமோகாவில் ஜெயிக்கப்போவது யாரு?

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் இரு முன்னாள் முதல்வர்களின் வாரிசுகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும், முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளுமான கீதா கடந்த ஆண்டு மஜதவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இவருக்கு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்க வேண்டும் என கர்நாடக கல்வி அமைச்சரும், சகோதரருமான மது பங்காரப்பா காங்கிரஸ் மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து … Read more

SBI தேர்தல் பத்திரம்: தேர்தல் ஆணைய தரவுகள் மூலம் கிடைக்கக்கூடிய தகவல்கள்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை தங்களிடம் வழங்கியதாகவும் அதனை தாங்கள் பெற்றுக் கொண்டதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிஏஏ அமலுக்கு எதிராக செயல்படுவது மாநில அரசுகளால் சாத்தியமா? – ஒரு தெளிவுப் பார்வை

புதுடெல்லி: ”மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதை நடைமுறைப்படுத்த எந்த வகையிலும் தமிழக அரசு இடமளிக்காது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்திருந்தார். அதேபோல் கேரளா, மேற்குவங்க அரசுகளும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், குடியுரிமை வழங்குதல் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ் வருவதால் இதில் மாநில அரசின் நிலைப்பாடு என எதுவும் இருக்க முடியாது. மாநில அரசுகள் … Read more

அருணாச்சலில் நெடுஞ்சாலை திட்டத்துக்கு ரூ.6,621 கோடி ஒதுக்கீடு

இடாநகர்: மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அருணாச்சலப் பிரதேத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் 8 முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக ரூ.6,621.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலை 913-ல், 265.49 கி.மீ தூரத்துக்கு 8 சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த தொகுப்பில் 1,3,5 ஆகிய திட்டங்கள் ஹர்லி-தல்ஹியா பகுதியையும், 2 மற்றும் 4-வது திட்டங்கள் கர்சாங்-மியாவ்-காந்திகிராம்-விஜய் நகர் ஆகிய பகுதிகளையும் இணைக்கும். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார். Source … Read more

Citizenship Amendment Act: இந்திய முஸ்லிம்களுக்கு இதனால் பாதிப்பு வருமா?

Citizenship Amendment Act: இந்த சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் CAA -வில் அவர்களின் குடியுரிமையைப் பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை.

சிஏஏவால் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை ரத்தாகாது: இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுத்தீன் ராஜ்வி கருத்து

புதுடெல்லி: உத்தர பிரதேசம் பரேலியில் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் (ஏஐஎம்ஜே) கடந்த வருடம் செப்டம்பரில் தொடங்கப்பட்டது. சன்னி முஸ்லிம் பிரிவின் பரேல்வி மதராஸா கொள்கைகளுக்கான முஸ்லிம் அமைப்பான இதன் நிர்வாகத்தில் உ.பி.யிலுள்ள பிரபல பரேலி ஷெரீப் தர்கா உள்ளது. இந்த அமைப்பு தொடக்கம் முதலே பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தனது ஆதரவை அளித்து வருகிறது. இதனால், இந்திய முஸ்லிம்கள் இடையே சர்ச்சைக்குரிய அமைப்பாக இது கருதப்படுகிறது. இதன் தேசியத் தலைவரான மவுலானா ஷஹாபுத்தீன் ராஜ்வி … Read more