அமலாக்கத் துறை ரெய்டுக்குப் பின் பாஜகவில் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ

கொல்கத்தா: கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி அமலாக்கத் துறை ரெய்டுக்கு உள்ளான, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் ராய் பாஜகவில் இணைந்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபரும், அம்மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியுமான தபஸ் ராய், ஐந்து முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், நகராட்சி ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பான புகாரில் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி தபஸ் ராய்க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு … Read more

மேற்கு வங்கத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மேற்கு வங்கத்தில் அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களின் மாத ஊதியம் ரூ.8,250-ல் இருந்து ரூ.9,000 ஆக அதாவது ரூ.750 உயர்த்தப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்களின் ஊதியம் மாதம் ரூ.500 உயர்த்தப்படும். இதுவரை மாதம் ரூ.6,000 பெற்று வந்த இவர்கள், இனி ரூ.6,500 பெறுவார்கள். அங்கன்வாடி மற்றும் ஆஷா ஊழியர்களின் பணி பெருமை அளிப்பதாக உள்ளது’’ என்று மம்தா கூறியுள்ளார். இதுகுறித்து மம்தா … Read more

காஷ்மீரில் பிரதமர் மோடி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல் பயணம்

PM Naredra Modi Kashmir Visit: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பாடகர் இம்ரான் அஜீஸ், காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவரைப் புகழ்ந்து ஒரு பாடலை இயற்றியுள்ளார். 

ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: திமுக எம்.பி. ஆ.ராசா மதுரை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 4-ம் தேதி பேசுகையில், ‘‘இந்தியா ஒரு நாடு அல்ல. துணைக் கண்டம். இங்கு தமிழகம் ஒரு நாடு, கேரளா ஒரு நாடு, ஒடிசா ஒரு நாடு. இந்த அனைத்து நாடுகளும் சேர்ந்ததுதான் இந்தியா என்ற துணைக் கண்டம்’’ என்றார். மேலும் ராமாயணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் ராமரின் எதிரிகள்’’ என்றார். இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவியதால் சர்ச்சை எழுந்தது. … Read more

370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி! வேளாண் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள்!

Viksit Bharat Viksit Jammu Kashmir : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்துக் கொண்டிருந்த இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் மோடி…

மானிய விலை எல்பிஜி, பெண்களுக்கு உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளியிட முடிவு

புதுடெல்லி: காங்கிரஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு டெல்லியில் மீண்டும் கூடி கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் தந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வார இறுதியில் காங்கிரஸ் தேர்தல் … Read more

மணிப்பூரில் அரசின் அனுமதி இல்லாமல் இடங்களின் பெயர்களை மாற்றினால் 3 ஆண்டு சிறை

இம்பால்: மணிப்பூரில் அம்மாநில அரசின் அனுமதி இல்லாமல் இடங்களின் பெயரை மாற்றினால் இனி 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இது தொடர்பான மசோதா கடந்த திங்கள்கிழமை மணிப்பூர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மலைகள், ஏரிகள் உட்பட முக்கிய இடங்களின் பெயர்களை அரசின் அனுமதி இல்லாமல் மாற்றும் போக்கு காணப்பட்டு வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், ‘மணிப்பூர் இடங்களின் பெயர்கள் 2024’ மசோதா கொண்டுவரப்பட்டது. இம்மசோதா கடந்த திங்கள்கிழமை அம்மாநில … Read more

5 பேர் ரத்த வாந்தி எடுத்த வழக்கில் குருகிராம் உணவு விடுதி மேலாளர் கைது

குருகிராம்: குருகிராம் உணவு விடுதியில் மவுத் பிரஷ்னருக்கு பதில் டிரை ஐஸ் சாப்பிட்ட 5 பேர் ரத்த வாந்தி எடுத்த வழக்கில் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரியாணாவின் குருகிராமில் உள்ளது லஃபோஸ்டா கபே என்ற உணவு விடுதி. இங்கு அங்கித் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை உணவு சாப்பிட சென்றார். சாப்பிட்டபின் அவர்களுக்கு மவுத் பிரஷ்னர் பாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் வாயில் போட்டதில் பயங்கர எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் … Read more

முதல்கட்ட பட்டியலில் இருந்து 2 பேர் விலகியதால் பாஜகவின் 2-ம் கட்ட வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிர கவனம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் 195 வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் கட்சி மேலிடத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் பாஜக … Read more

ஷாஜகான் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: மேற்குவங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்குவங்க பொது விநியோக திட்டத்தில் ரூ.10,000 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேற்குவங்கத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷாஜகான் ஷேக் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி 5-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், சந்தேஷ்காலியில் உள்ள அவரது வீட்டுக்கு சோதனையிட சென்றனர். அப்போது 200 பேர் கும்பல், அதிகாரிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் பல அதிகாரிகள் காயமடைந்தனர். இது … Read more