2-வது டி20 போட்டி: வங்காளதேச அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இலங்கை

சிலெட், வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த … Read more

தாத்தா, பேரன் என இரட்டை வேடத்தில் நடித்து அசதியுள்ள தோனி!

2024 ஐபிஎல்-ன் பரபரப்பு காய்ச்சல் எங்கும் பரவத் துவங்கிவிட்டது. இது மற்றுமொரு அற்புதமான ஐபிஎல் ஆண்டாக இருக்கப்போகும் நிலையில், ஜியோ சினிமா அதன் விளம்பரப் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது. மொத்தம் மூன்று விளம்பரப் படங்கள் உள்ள இந்த பிரச்சாரத்தின் முதல் படத்தில் எம்.எஸ்.தோனி இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்த மூன்று படங்களுமே டாடா ஐபிஎல் போட்டிகளை ஒன்றாக டிஜிட்டல் தளத்தில் காணப்போகும் ஒருமித்த ஆவலை பெரிதளவில் தூண்டியுள்ளன. தற்போது, அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் டிஜிட்டல் தளங்களில் விளையாட்டுப் … Read more

ஐபிஎல் 2024: ’சரவெடி காத்திருக்கிறது’ ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு மெசேஜ்

ஐபிஎல் 2024-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்க இருக்கிறார். மும்பை இந்தின்ஸ் அணிக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியிருக்கும் அவர், மும்பை அணிக்காக புதிய அவதாரத்தில் களமிறங்க இருக்கிறார். இவரது தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று சாதனை படைத்ததுடன், அடுத்த ஆண்டும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி, தங்கத்தை விட்டுட்டோமே என நினைத்து, அவரை பெரும் முயற்சிக்குப் பிறகு … Read more

IND vs PAK: இந்தியா பாகிஸ்தான் டி20 உலக கோப்பை டிக்கெட் விலை ரூ.1.86 கோடியா?

T20 World Cup 2024 India vs Pakistan: ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஜூன் 1 முதல் துவங்க உள்ளது. இந்த முறை உலக கோப்பை போட்டி கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.  ஐசிசி போட்டிகள் முதல் முறையாக அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி உலக கோப்பை போட்டிகள் துவங்கினாலும், ஜூன் 9-ம் தேதி நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு தான் பலரும் ஆர்வமாக உள்ளனர்.  காரணம் இந்தியா மற்றும் … Read more

ஹர்திக் பாண்டியாவை விட அதிக சம்பளம் வாங்கும் இந்திய வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டுக்கான வீரர்களின் மத்திய ஒப்பந்தங்கள் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது.  இதில் பல சர்ச்சைகள் எழுந்தது.  உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி ஷ்ரேயாஸ் ஐயர் பெயர் இடம் பெறாமல் போனது.  இஷான் கிஷன் ரஞ்சி கோப்பை போட்டிகளை விளையாட மறுத்ததால் அவரது பெயரும் இடம் பெறவில்லை.  காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய ஷ்ரேயாஸ் ஐயர், காயம் சரியான பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை.  இதனால் கோபமடைந்த பிசிசிஐ இவர்கள் … Read more

பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதல்

பெங்களூரு, 5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வந்தது. பெங்களூருவில் 11 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் லீக் ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் டெல்லியில் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா 4 லீக் ஆட்டங்களில் … Read more

கைப்பந்து லீக்: மும்பையிடம் போராடி வீழ்ந்தது சென்னை

சென்னை, 9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 28-வது லீக் ஆட்டத்தில் சென்னை பிளிட்ஸ்- மும்பை மீட்டியார்ஸ் அணிகள் மல்லுக்கட்டின. தொடக்கம் முதல் கடைசி வரை திரில்லிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் மும்பை அணி 11-15, 15-13, 16-14, 5-15, 21-19 என்ற செட் கணக்கில் சென்னையை தோற்கடித்து 5-வது வெற்றியை சுவைத்தது. சென்னை அணிக்கு இது 3-வது … Read more

காயத்தில் இருந்து விடுதலை ஆன முக்கிய வீரர்… மும்பை இந்தியன்ஸ் அணி ஹேப்பி!

Suryakumar Yadav, IPL 2024: ஐபிஎல் தொடர் இன்னும் சில நாள்களில் தொடங்க உள்ளது. மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் சென்னையில் தொடங்க உள்ள நிலையில், 10 அணிகளும் வெவ்வேறு இடங்களில் தங்களது பயிற்சி முகாமை தொடங்கி உள்ளனர். குறிப்பாக, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் தனது பயிற்சியை தொடங்கியிருக்கின்றன. ருதுராஜ் கெய்க்வாட் போன்ற முக்கிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கேப்டன் தோனியும் இன்று தனிவிமானம் மூலம் சென்னை … Read more

இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் ஓய்வு

புதுடெல்லி, இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரர் ஐதராபாத்தை சேர்ந்த 31 வயதான சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான சாய் பிரனீத், 2019-ம் ஆண்டில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று சாதனை படைத்திருந்தார். தனது விளையாட்டு வாழ்க்கையில் புதிய இன்னிங்சை தொடங்க இருக்கும் சாய் பிரனீத், அமெரிக்காவில் உள்ள டிரையாங்கிள் பேட்மிண்டன் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக அடுத்த மாதத்தில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார். தினத்தந்தி … Read more

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஐ.ஓ.பி. அணி வெற்றி

சென்னை, சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) அணி 5-1 என்ற கோல் கணக்கில் அடையாறு யுனைடெட் கிளப்பை தோற்கடித்தது. ஐ.ஓ.பி. அணியில் பிரப்ஜோத் சிங் 2 கோலும், தாலிப் ஷா, முத்துசெல்வன், ஹர்மன்பிரீத் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர். அடையாறு யுனைடெட் அணியில் பிரதமேஷ் … Read more