DC vs CSK: தல தோனியின் அசூர ஆட்டம்… இருந்தும் சிஎஸ்கே தோல்வி – டெல்லி அணிக்கு முதல் வெற்றி

DC vs CSK Highlights: 17ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று அதன் 13ஆவது லீக் ஆட்டம் விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று சந்தித்தது.  டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணியின் ஓப்பனர்களான டேவிட் வார்னர் – பிருத்வி ஷா ஆகியோர் அதிரடியாக விளையாடி … Read more

GT vs SRH: வலிமையான ஹைதராபாத்தை வீழ்த்திய குஜராத்… SRH செய்த தவறுகள் என்னென்ன?

GT vs SRH Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மாலை போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின.  டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அவர் பிளேயிங் லெவனில் மாற்றம் … Read more

மும்பையில் இருந்து அடுத்த ஆண்டு வெளியேறும் 2 வீரர்கள்! மஞ்சள், ஆரஞ்சு சட்டையில் பார்க்கலாம்

கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிய பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஏற்பட்ட சலசலப்பு இன்னும் ஓயவில்லை. பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை திடீரென அந்த அணியுடன் டிரேட் செய்து எம்ஐ அணி அழைத்து வந்ததுடன் எந்த காரணமும் சொல்லாமல் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இது … Read more

மயங்க் யாதவின் ஜெட்வேக பந்துவீச்சு! சிஎஸ்கே தவறவிட்ட தங்கம் லக்னோவில் ஜொலிக்குது

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 150 கிலோ மீட்டருக்கும் மேல் பந்துவீசி தீப்பொறிபோல் தெறிக்கவிட்டிருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் 21 வயதே ஆன இளம் வேகப்புயல் மயங்க் யாதவ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். சும்மா சொல்லக்கூடாது, மயங்க் போட்ட பந்துகள் எல்லாமே ஜெட்வேகத்தில் சென்றது. பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் ஷிகர் தவான், பேரிஸ்டோவ் ஆகியோரே வியந்து பார்த்தனர். அவர்கள் பேட்டை அசைப்பதற்குள் பந்து விக்கெட் கீப்பர் டிகாக்கிடம் தஞ்சமடைந்தது. விக்கெட் … Read more

பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறாரா ஷகீன் ஷா அப்ரிடி?

லாகூர், கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனையடுத்து அந்த அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த பாபர் அசாம் நீக்கப்பட்டு 20 ஓவர் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடியும், டெஸ்ட் அணியின் கேப்டனாக பேட்ஸ்மேன் ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர். ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டன் யாரும் நியமிக்கப்படவில்லை. சமீபத்தில் புதிய தலைவராக … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளா – ஜாம்ஷெட்பூர் இடையிலான ஆட்டம் சமன்

பெங்களூரு, 12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கடந்த 15-ம் தேதி முதல் நேற்று வரை ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுமார் 15 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் இந்த தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற … Read more

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் சிக்கி ரெட்டி ஜோடி தோல்வி

மாட்ரிட், ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சிக்கி ரெட்டி- சுமீத் ரெட்டி இணை 17-21 மற்றும் 12-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஹனிங்டியாஸ் மெண்டரி- ரினோவ் ரிவால்டி இணையிடம் வீழ்ந்தது. இந்த ஆட்டம் 29 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இத்துடன் இந்த தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. தினத்தந்தி Related Tags : ஸ்பெயின் … Read more

ஐ.பி.எல்: லக்னோ அணியில் டேவிட் வில்லிக்கு பதிலாக மாற்று வீரர் சேர்ப்பு

லக்னோ, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி தனிப்பட்ட காரணத்துக்காக அணியில் இருந்து விலகி விட்டார். இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியை அவரது அடிப்படை விலையான ரூ.1¼ கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த காலங்களில் அவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளில் அங்கம் வகித்திருந்தார் என்பது … Read more

மியாமி ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா இணை சாம்பியன்

மியாமி, அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, குரோஷியாவின் இவான் டோடிக் – அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் இணையுடன் மோதியது. இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை போபண்ணா இணை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் போபண்ண இணை … Read more

இந்தியாவுக்கு கிடைசாச்சு புதிய வேகப் புயல்… பஞ்சாப் அணியை பதறவைத்த மயங்க் யாதவ் – யார் இவர்?

IPL 2024 LSG vs PBKS Highlights: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இன்று இத்தொடரின் 11ஆவது லீக் போட்டி லக்னோ எக்னா மைதானத்தில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியின் டாஸை வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  குறிப்பாக, லக்னோ அணியின் கேப்டனாக இன்று நிக்கோலஸ் பூரன் செயல்பட்டார். … Read more