கொலையை விட பெரிய குற்றம் மேட்ச்-பிக்சிங்: சிஎஸ்கே ஆவணப்படத்தில் தோனி

தடை செய்யப்பட்ட பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டெழுந்து கடந்த ஐபிஎல் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது பற்றிய சிஎஸ்கேயின் ஆவணப்படம் ஒன்று தயாராகி விரைவில் வெளிவர உள்ளது.   இதில், தோனி, “ஒருவர் மிகப்பெரிய குற்றம் செய்ய முடியும் எனில் அது மேட்ச் பிக்சிங் தான், கொலை அல்ல” என்று பேசியதாக படமாக்கப்பட்டுள்ளது.  “‘Roar of the Lion” என்ற இந்த ஆவணப்படத்தின் 45 விநாடி ட்ரெய்லரில் தோனி, “அணியின் மீது புகார், என் மீதும் … Read moreகொலையை விட பெரிய குற்றம் மேட்ச்-பிக்சிங்: சிஎஸ்கே ஆவணப்படத்தில் தோனி

பொறுப்பற்ற பீல்டிங்… சீரழிந்த பந்துவீச்சு: இமாலய இலக்கிருந்தும் வெற்றியை தாரைவார்த்த இந்திய அணி: டர்னர் காட்டடியில் ஆஸி. அபாரம்

இந்திய அணியின் பொறுப்பில்லாத பீல்டிங், கட்டுக்கோப்பில்லாத பந்துவீச்சு ஆகியவற்றால், மிகப்பெரிய ஸ்கோர் எடுத்த நிலையிலும், மொஹாலியில் நேற்று நடந்த 4-வது ஒருநாள் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது   முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. 359ரன்கள் என்ற இலக்கை விரட்டிய, ஆஸ்திரேலிய அணி 13 பந்துகள் மீதிமிருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   இதன் மூலம் 5 … Read moreபொறுப்பற்ற பீல்டிங்… சீரழிந்த பந்துவீச்சு: இமாலய இலக்கிருந்தும் வெற்றியை தாரைவார்த்த இந்திய அணி: டர்னர் காட்டடியில் ஆஸி. அபாரம்

பின்லாந்து குத்துச்சண்டை: இந்தியாவுக்கு1 தங்கம், 4 வெள்ளி

பின்லாந்தின் ஹெல்சிங்கியில் நடைபெற்று வரும் ஜிபி சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.  ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டங்களில் 56 கிலோ பிரிவில் சக வீரர் முகமது ஹுஸýமுதீனை வீழ்த்தி தங்கம் வென்றார் கவிந்தர் சிங் பிஷ்ட்.  ஷிவ தாப்பா 60 கிலோ பிரிவு இறுதியில் 1-4 என உள்ளூர் வீரர் அர்ஸலனிடம் தோல்வியுற்று வெள்ளி வென்றார். அதே போல் கோவிந்த் சஹானி 2-3 என்ற புள்ளிக்கணக்கில் … Read moreபின்லாந்து குத்துச்சண்டை: இந்தியாவுக்கு1 தங்கம், 4 வெள்ளி

கடைசியில் 5 வாய்ப்புகளை நழுவ விட்டோம்… பீல்டிங் படுமோசம்: ஏமாற்றத்தில் கோலி சாடல்

மொஹாலியில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்களை எடுத்திருந்தும் ‘உலகத்தின் தலை சிறந்த பந்து வீச்சு’ மற்றும் ‘இந்தப் பந்து வீச்சுக்கு எதிராக 300 எல்லாம் சாத்தியமில்லை’ என்ற தற்பெருமைவாதங்களெல்லாம் உடைந்து போக ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் அச்சுறுத்தலுடன் மீட்டெழுச்சி பெற்றுள்ளது.   359 ரன்கள் இலக்கை  நம்ம ஊரு சுயபிரஸ்தாப பினிஷர் போல் அல்லாமல் கடைசி ஓவர் வரை  கொண்டு போகாமல் 48வது ஓவரிலேயே முடித்து விட்டார் ஆஷ்டன் … Read moreகடைசியில் 5 வாய்ப்புகளை நழுவ விட்டோம்… பீல்டிங் படுமோசம்: ஏமாற்றத்தில் கோலி சாடல்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சீன வீராங்கனை சென் யூபே ‘சாம்பியன்’ தாய் ஜூ யிங்குக்கு அதிர்ச்சி அளித்தார்

பர்மிங்காம்,  ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தாய் ஜூ யிங் (சீனதைபே), 4–ம் நிலை வீராங்கனை சென் யூபேவை (சீனா) எதிர்கொண்டார். அபாரமாக ஆடிய 21 வயதான சென் யூபே 21–17, 21–17 என்ற நேர் செட் கணக்கில் 41 நிமிடங்களில் தாய் ஜூ யிங்கை மிரள வைத்து, இந்த பட்டத்தை முதல்முறையாக தட்டிச் சென்றார். … Read moreஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சீன வீராங்கனை சென் யூபே ‘சாம்பியன்’ தாய் ஜூ யிங்குக்கு அதிர்ச்சி அளித்தார்

துளிகள்…

* ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் தேசிய ஜூனியர் அணிக்கான பயிற்சி முகாமுக்கு 60 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 11-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பெங்களூரு சாய் வளாகத்தில் நடைபெறவுள்ள இப்பயிற்சி முகாமில் 6 கோல் கீப்பர்கள், 15 டிபன்டர்கள், 18 மிட்பீல்டர்கள், 21 பார்வர்ட்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.  * 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில் பலம் வாய்ந்த கத்தார் அணியுடன் டோஹாவில் நடக்கவுள்ள நட்பு ஆட்டத்தில் மோதுகிறது … Read moreதுளிகள்…

3–வது ஆட்டத்திலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

டர்பன்,  இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. தனது 14–வது சதத்தை அடித்த குயின்டான் டி காக் 121 ரன்களும் (108 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), வான்டெர் டுசென் 50 ரன்களும், டேவிட் மில்லர் 41 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி … Read more3–வது ஆட்டத்திலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

இந்தியன்வெல்ஸ் ஏடிபி: பிரஜ்னேஷ் அபாரம்

அமெரிக்காவின் இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் உலகின் 18-ஆம் நிலை வீரர் நிக்கோலஸ் பஸிலாஷ்வில்லியை வீழ்த்தி இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது வாழ்க்கையில் பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.  உலகின் 18-ஆம் நிலை வீரரான பஸிலாஷ்வில்லியை 6-4, 6-7, 7-6, என்ற செட் கணக்கில் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் போராடி வென்றார் பிரஜ்னேஷ். இவர்உலகின் 97-ஆம் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களில் பிரஜ்னேஷ் கடுமையாக போராட்டத்தை சந்தித்து வென்றார்.  இதுதொடர்பாக … Read moreஇந்தியன்வெல்ஸ் ஏடிபி: பிரஜ்னேஷ் அபாரம்

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் அசத்தல் வெற்றி

இன்டியன்வெல்ஸ்,  இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குணேஸ்வரன் முன்னணி வீரர் பாசிலாஷ்விலியை வீழ்த்தி அசத்தினார். குணேஸ்வரன் அபாரம் இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் தகுதி நிலை வீரரும், தரவரிசையில் 97–வது இடம் வகிப்பவருமான இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 18–ம் நிலை வீரர் நிகோலாஸ் பாசிலாஷ்விலியை (ஜார்ஜியா) எதிர்கொண்டார். 2 மணி 32 நிமிடங்கள் நடந்த பரபரப்பான இந்த … Read moreஇன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் அசத்தல் வெற்றி