''பாஜக அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்'' – தமிழக மீனவர்கள் கைதுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை: “இலங்கை கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவில்லையெனில் மத்திய பாஜக அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. சமீபத்தில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம், பாம்பன் பாலம் அருகே தமிழக … Read more

ஜாபர் சாதிக்கிற்கு நெருக்கமானவர்கள்… பாஜக, அதிமுகவில் உள்ளனர் – அமைச்சர் ரகுபதி அதிரடி

Jaffer Sadiq Issue:  ஜாபர் சாதிக்கிற்காக வழக்கினை நடத்தியவர் பாரதிய ஜனதா கட்சியினுடைய வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். 

''அருண் கோயல் ராஜினாமா தேர்தல் நேர்மையாக நடக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது'' – திருமாவளவன் சாடல்

சென்னை: "பாஜகவும் அதன் ஆதரவு சக்திகளும் தேர்தல் முறையை சீரழித்து, முறைகேடான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்பதைத்தான் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் இந்த நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன. எனவே, உச்ச நீதிமன்றம் இதனை வேடிக்கை பார்க்க கூடாது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து அருண் கோயல் பதவி விலகியிருப்பது நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடக்குமா என்கிற அச்சத்தை எழுப்பி இருக்கிறது. எனவே, உச்ச … Read more

ஜாபர் சாதிக் விவகாரத்தில் திமுக மீது அவதூறு பரப்பினால் வழக்கு – எம்பி வில்சன்

ஜாபர் சாதிக் விவகாரத்தில் யாரேனும் தொடர்ந்து திமுக மீது அவதூறு பரப்பி வந்தால் நிச்சயம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பி பி.வில்சன் எச்சரித்துள்ளார்.   

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த திமுக தவறிவிட்டது – ஆளுநரைச் சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி

சென்னை: “தமிழகத்தைப் போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டும். ஒருதுளி போதைப்பொருள்கூட தமிழகத்தில் விற்பனை ஆகாமல் தடுக்க வேண்டும்” என்று அதிமுக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வலியுறுத்தியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தனர். தமிழகத்தில் ஆபத்தான போதைப்பொருள் புழக்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் நிலவும் அச்சுறுத்தல் வருங்கால தலைமுறைகளுக்கு, … Read more

பாஜகவில் இணைந்த ஓய்வு பெற்ற காவல் துறையினர்… காஞ்சீபுரத்தில் நடந்த நிகழ்ச்சி!

காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழாவில், 20க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் தங்களை பாஜக அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை: கோடை வெயில் அதிகரித்துள்ளதால் பகல் 11 முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகப்படியான வெயிலால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கோடை காலத்தில் பொது மக்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்றக் கூடாதவை குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ளார். … Read more

கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது – அண்ணாமலை!

நிர்பந்தம் காரணமாக திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை கமலஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.  

மக்களவைத் தேர்தல் 2024 | விருப்ப மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தி வருகிறார். மக்களவைத் தேர்தலில் தமிழகம் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் சுமார் 2,500 விருப்ப மனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனு தாக்கல் செய்தவர்களிடம் இன்றும், நாளையும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று திருவள்ளூர் (தனி … Read more

ஜாபர் சாதிக் விவகாரத்தில் அரசியல் செய்கிறதா NCB – ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் கேள்வி

போதைப் பொருள் கடத்தல் தொடர்பான Jaffer Sadiq விவகாரத்தில் NCB அரசியல் செய்கிறதா? என்ற கேள்வியை புள்ளிவிவரங்களுடன் ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் எழுப்பியுள்ளார்.