இஸ்ரோ தயாரித்த இன்சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கைகோள்: ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது

சென்னை: வானிலை, பேரிடர் தொடர்பான எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் பெறுவதற்காக இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கைகோள், ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. காலநிலை மாற்றம் ஏற்படும் நிலையில், வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் நிதி பங்களிப்பின் கீழ் வானிலை ஆய்வுக்காக இன்சாட்-3டிஎஸ் எனப்படும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்தது. இதை விண்ணில் செலுத்துவதற்கான 27.30 மணிநேர கவுன்ட்-டவுன் நேற்று முன்தினம் … Read more

முதலமைச்சர் முக ஸ்டாலின் கடுமையாக வேலை செய்து வருகிறார் – டிஆர் பாலு!

மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு நிறைவேற்றி உள்ளது என்று திருச்சியில் டி.ஆர்.பாலு பேச்சு.  

தேர்தலுக்கு முன் வெளியே வர செந்தில்பாலாஜி தீவிரம்: வந்தாலும் தேர்தல் களத்தில் திமுக முன்னிலைப்படுத்துமா?

சென்னை: மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலுக்கு முன்பாக வெளியே வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் சட்டப்பேராட்டம் நடத்திவருகிறார் செந்தில் பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2011-15 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்குகளை அடிப்படையாக … Read more

பாஜகவில் சேருபவர்கள் பொண்டாடியை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள் – ஆ.ராசா பேச்சு!

நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரம் போல எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும் பிஜேபி என்ற மிஷினுக்குள் சென்று விட்டால் வெளியில் வெள்ளையாக வரலாம் என்ற மோடி மஸ்தான் வித்தைக்காரர் தான் மோடி ஆ.ராசா பேச்சு.  

விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க சதி: நடிகையின் முன்னாள் உதவியாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: இந்தியாவில் விடுதலை புலிகள்அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், போதைப் பொருட்கள் விற்பனை, ஹவாலா பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திரைப்பட கலைஞரின் முன்னாள் உதவியாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் கடந்த 2021-ம்ஆண்டு 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 5 ஏகே 47 துப்பாக்கிகள், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 1000 தோட்டாக்களை ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் … Read more

தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்க தடை: சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்களில் விதிகளை மீறி ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் பொது இடங்களில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 8-ம் தேதி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சென்னை மெரினாகடற்கரையில் ஆய்வு மேற்கொண்டு வடமாநிலஇளைஞர்கள் விற்பனை செய்த பஞ்சுமிட்டாய்களை பறிமுதல் செய்தனர். அந்த பஞ்சுமிட்டாய்கள் … Read more

விருதுநகரில் 10 பேர் பலியான பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் என்ன?

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். “பட்டாசு ஆலையில் மருந்து கலவையின்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வெடி பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததும் விபத்துக்கு காரணம்” என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று ஆலங்குளம் அருகே உள்ள குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய … Read more