“அண்ணாமலை ஸ்லீப்பர் செல்” – துரை வைகோ

சென்னை: “அண்ணாமலை ஒரு ஸ்லீப்பர் செல்” என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக சார்பில் இளையோர் தேர்தல் பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல். காரணம் பாஜக அதிமுக கூட்டணியை உடைத்து எதிர் கட்சிகளின் வலிமை இழக்க செய்துவிட்டார். அதனால் தான் அவரை நான் திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று சொல்கிறேன்” என்றார். … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம்.ஆர். விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசை கண்டித்தும், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை கண்டித்தும், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி, கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், … Read more

“மக்களவைத் தேர்தலில் பாடம் புகட்டுவர்” – விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: “ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதத்தில் அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்று நினைக்கும் மத்திய அரசுக்கு விவசாயிகள் அனைவரும் வரும் மக்களவைத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021-ல் விவசாயிகளின் மாபெரும் எழுச்சிமிக்க போராட்டத்துக்கு அடிபணிந்த மத்திய பாஜக … Read more

டூவீலர் மீது மினி பஸ் மோதி விபத்து: இருவர் பலி!

Perambalur Accident: பெரம்பலூர் அருகே டூவீலர் மீது மினி பஸ் மோதி விபத்து: இருவர் பலி; விபத்துக்கு காரணமான மினி பஸ்சை உறவினர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு  

“மோடி அரசின் கொடுங்கோன்மைச் செயல்” – விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்

சென்னை: “கரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட ஒட்டுமொத்த நாட்டுக்கும் உணவளித்த விவசாயிகளை நடுச்சாலையில் போராடவிட்டது மட்டுமின்றி அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியும், காவல்துறையை ஏவியும் சிறிதும் இரக்கமின்றித் தாக்குதல் நடத்தியிருக்கும் மோடி அரசின் கொடுங்கோன்மைச் செயலானது வன்மையான கண்டனத்துக்குரியது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி, அமைதி வழியில் மீண்டும் போராடிவரும் விவசாயிகளின் … Read more

காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கும் BJPக்கும் என்ன தொடர்பு? அண்ணாமலை விளக்கம்

Annamalai On En Mann En Makkal Yatra: காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் பிப்.20 வரை நீட்டிப்பு: இது 21-வது முறை

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த … Read more

இது சீட்டுகளுக்காக உருவான கூட்டணி கிடையாது: கோவையில் துரை வைகோ

யாரெல்லாம் பாஜாகவை எதிர்க்கின்றார்களோ அவர்களுக்கு அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது – துரை வைகோ காட்டம் 

கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செந்தில் பாலாஜியின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் … Read more

“தோடர்கள் தங்களது பாரம்பரியத்தை கைவிடாததில் மகிழ்ச்சி” – ஆளுநர் ஆர்.என்.ரவி @ உதகை

உதகை: “தோடர்கள் நவீனத்தை நோக்கி முன்னேறினாலும் தங்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கைவிடாதது மகிழ்ச்சி அளிக்கிறது” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 3 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் உதகை சென்றுள்ளார். உதகை ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ள அவர் இன்று காலை தோடரின மக்களின் தலைமை மந்தமான முத்தநாடு மந்துவுக்கு சென்றார். அவரை தோடரின மக்கள் தலைவர் மந்தஏஷ் குட்டன் மற்றும் தலைவர்கள் வரவேற்றனர். அவர் மற்றும் அவரது மனைவிக்கு தோடரின … Read more