அமைச்சர் உதயநிதி ஆய்வு… பாபா திரைப்பட பாணியில் இரவோடு இரவாக மாறிய விடுதி: மாணவர்கள் நெகிழ்ச்சி

கோவையில் பாபா திரைப்பட சம்பவம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஆய்வால் இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்ட மாணவர்களின் கோரிக்கைகள்

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை செலவினமாக தமிழக அரசு கருதக் கூடாது: உயர் நீதிமன்றம்

மதுரை: தமிழக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை செலவினமாக கருதக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜா செல்வன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி வசூலிக்கும்போது நூலக வரியும் சேர்த்து வசூலிக்கின்றன. நூலக வரியாக வசூலிக்கப்படும் தொகையை உள்ளாட்சி அமைப்புகள் நூலகங்களுக்கு வழங்க வேண்டும். மதுரை மாவட்ட மைய நூலகத்துக்கு மதுரை மாநகராட்சி ரூ.7 கோடி நூலக வரிபாக்கி வைத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 67 … Read more

தமிழகத்தில் அண்ணாமலையை பூதக்கண்ணாடி ஸ்பீக்கர் போட்டு காட்டுகிறீர்கள்-கார்த்திக் சிதம்பரம்

தமிழகத்தில் அண்ணாமலையை பூதக்கண்ணாடி ஸ்பீக்கர் போட்டு காட்டுகிறீர்கள் என கார்த்திக் சிதம்பரம் பேசியுள்ளார்.   

பாஜகவினர்தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என வீடு வீடாக பரப்புரை செய்ய மகளிரணிக்கு கனிமொழி அறிவுறுத்தல்

சென்னை: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த நாடு என்னவாகும் என்பதை வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறுங்கள். நடக்கவே நடக்காத விஷயத்தை நடந்ததாக சமூக ஊடகங்களில் பரப்புவதில் கைத்தேர்ந்தவர்கள் பாஜகவினர் என்று மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை (பிப்.29) அன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை … Read more

சர்பிராஸ் கான் 20 ஓவர் போட்டிக்கு சரிபட்டு வரமாட்டார் – கங்குலி

இந்திய அணியின் இளம் வீரர் சர்பிராஸ்கான் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே சரியான தேர்வாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.  

கறார் காட்டும் காங்., வலியுறுத்தும் விசிக… – மாறுகிறதா திமுகவின் ‘தொகுதிக் கணக்கு’?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்திருக்கிறது திமுக. திமுக கூட்டணியில் இந்த இரு கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து விவரங்கள் இனி பேச்சுவார்த்தை மூலம் முடிவு எடுக்கப்படும் என இரு கட்சித் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். சிபிஐ, சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் இன்று திமுகவுடன் தொகுதிப் பங்கிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலைப் போல், இரு கட்சிகளுக்கும் இரண்டு தொகுதிகள் … Read more

திமுக நிர்வாகி வெட்டிக் கொலை – மர்ம கும்பல் வெறிச்செயல்! விரைந்து சென்ற அமைச்சர்

சென்னைக்கு அருகே வண்டலூரில் திமுக ஒன்றிய துணை தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.   

“பாஜகவின் மாநில டீம் அதிமுக… அதிமுகவின் தேசிய டீம் பாஜக!” – உதயநிதி விமர்சனம் @ கோவை

கோவை: பாஜகவின் மாநில டீம் அதிமுக, அதிமுகவின் தேசிய டீம் பாஜக என கோவையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுகவின், தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம், அவிநாசி சாலை, சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் இன்று (பிப்.29) நடந்தது. இக்கூட்டத்துக்கு திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் … Read more

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் சரமாரி கேள்வி

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை புலன் விசாரணை அதிகாரியிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.  

‘ஸ்டெர்லைட் ஆலை மூடல் சரியே!’ – மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீடு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, ஆலை நிர்வாகம் தரப்பில் … Read more