குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல்: ரூ.17,373 கோடியில் 36 திட்டங்கள் தொடங்கினார் மோடி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ரூ.17,373 கோடி மதிப்பிலான 36 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் மத்திய அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுதல் மற்றும் நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று காலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, ரூ.17,373 கோடி மதிப்பிலான 18 திட்டங்களை தொடங்கி வைத்தார். 15 புதிய திட்டங்களுக்கு … Read more

தமிழக சிறைகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு: அரசு தகவல் @ உயர் நீதிமன்றம்

மதுரை: தமிழக சிறைகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக சிறைகளில் கைதிகளுக்கு அவசர காலங்களில் மருத்துவ உதவி வழங்க சிறை வளாகத்தில் மருத்துவ அலுவலர்களுக்கு குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இந்த குடியிருப்புகளில் மருத்துவர்கள் தங்குவதில்லை. இதனால் சிறை கைதிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் போவதால் கைதிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அரசு … Read more

அமைச்சர் தங்கம் தென்னரசு சொ.கு வழக்கில் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை வியாழக்கிழமை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்தம் வெங்கடேஷ் உத்தரவிட்டிருக்கிறார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கு … Read more

பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரூ.15 கோடிக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல் @ லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

கடலூர்: பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.15 கோடிக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் கடந்த 2011-2016ஆம் ஆண்டுகளில் நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம். அப்போது நகராட்சி ஆணையராக பணிபுரிந்த பெருமாள் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை வாகன நிறுத்துமிடமாக அமைக்க ஏலம் விட்டதில் … Read more

“அந்த வரலாற்றில் காணாமல் போவோர் வரிசையில் பிரதமர் மோடி…” – திமுக பதிலடி

சென்னை: “திமுக அழிந்து போகும். தலைதூக்காது என திமுக உருவான 1949-ம் ஆண்டில் இருந்து இன்று வரை 74 ஆண்டு காலமாகப் பலர் பேசிக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், திமுக என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது. திமுகவையே இல்லாமல் ஆக்கிவிடுவாராம். சவால் விட்டுள்ளார் பிரதமர் மோடி. இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். அந்த வரிசையில் பிரதமர் மோடியும் விரைவில் இணைந்துவிடத்தான் போகிறார் என்று எச்சரிக்கிறேன்” என்று … Read more

சத்தியமங்கலம்: ஹோட்டல் ரூமில் உல்லாசம்.. வசமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி.!

சத்தியமங்கலத்தில் கள்ளக்காதல் ஜோடி ஹோட்டல் ரூமில் தனியாக இருக்கும்போது, உறவினர்கள் வந்து சுற்றி வளைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஹோட்டல் மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

தமிழகம் முழுவதும் மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் மார்ச் 3ம் தேதியன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும். … Read more

இஷ்டத்துக்கு செய்தி வெளியிட வேண்டாம்.. ஊடகங்கள் அறத்துடன் நடந்துக்கொள்க -செல்வபெருந்தகை

TN Congress President K Selvaperunthagai: திமுகவிற்கும் காங்கிரஸ் இருக்கும் இடையே கருத்து வேறுபாடு இழுபரியோ எதுவும் இல்லை. ஊடகங்களும், பத்திரிகைகளும் இஷ்டத்திற்கு அரசியல் நாகரீகம் அற்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் -தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை

‘செல்வாக்கு…’ – செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுத்து உயர் நீதிமன்றம் அடுக்கிய காரணங்கள்

சென்னை: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்குமிக்க நபராகவே நீடிக்கிறார் எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. அதன் முழு விவரம்: செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.சென்னை புழல் சிறையில் நீதிமன்ற … Read more

மழை பாதிப்பு நிவாரண தொகையை ஒன்றிய அரசு இதுவரை கொடுக்கவில்லை-கனிமொழி எம்.பி

தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பத்திரிகையாளர்களை  சந்திப்பு