விருதுநகர் மக்களவைத் தொகுதியில் ராதிகாவை களமிறக்க பாஜக திட்டம்?

விருதுநகர்: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் பாஜகவினர் ஆவலோடு காத்திருக்கின்றனர். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜகவில் போட்டியிட மாவட்டச் செயலாளர் பாண்டுரங்கனின் அண்ணன் ஜவஹர், பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், டெல்லியில் பணியாற்றி வரும் டாக்டர் வேதா தாமோதரன் ஆகியோர் பெயர் தொடக்கத்தில் அடிபட்டது. ஆனாலும், விருதுநகர் தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிடுவதா அல்லது கூட்டணிக்கு … Read more

அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்! மகளிர் உரிமைத்தொகை உயர்வு..வேறு என்ன?

Lok Sabha Elections 2024 ADMK Manifesto : நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். 

‘ஜெயலலிதாவின் மகள்’ புதிய கட்சி தொடக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக் கொள்ளும் ஜெ.ஜெயலட்சுமி என்பவர், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிதாக தொடங்கிய தனது கட்சியின் பெயரை நேற்று பதிவு செய்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள். மக்களவைத் தேர்தலையொட்டி புதிதாக ‘எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருக்கிறேன். அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். எனது கட்சிக்கு இரட்டை இலையுடன் கூடிய இரட்டை ரோஜா … Read more

Thankar Bachan: பாமக வேட்பாளர்கள் பட்டியல்-கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டி!

Lok Sabha Election 2024 PMK Candidates List : மக்களவை தேர்தல் 2024 நடைபெற உள்ளதை ஒட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் களம் காண உள்ள வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம்: ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு நாள் கெடு

புதுடெல்லி: பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என கடும் கண்டனம் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பாக முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, கடந்த 2006-11 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது மனைவி … Read more

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு கொமதேக வேட்பாளர் மாற்றம்!

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு கொமதேக வேட்பாளர் மாற்றம் : பழைய வீடியோ வைரல் ஆனதால் வேட்பாளர் மாற்றம் என தகவல் 

தமிழக பாஜக வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு: கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை போட்டி

சென்னை: தமிழகத்தில் 9 தொகுதிகளுக் கான பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தென் சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுடன் 39 தொகுதிகளுக்கான பங்கீடு நேற்றுடன் முடிந்தது. பாமகவுக்கு 10 … Read more

காங்கிரஸின் 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: புதுச்சேரியில் வைத்திலிங்கம் போட்டி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டுகாங்கிரஸ் சார்பில் 3-வது வேட்பாளர் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதில் 57 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி புதுச்சேரி தொகுதியில் எம்.பி. வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார். மேற்குவங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிர்காம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தெலங்கானாவில் 5 தொகுதிகள், ராஜஸ்தானில் 6 தொகுதிகள்,மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் 15 … Read more

“அமலாக்கத் துறையும், ஐ.டி.யும்தான் பாஜாகவின் அதிகாரபூர்வ கூட்டணி” – முத்தரசன் விமர்சனம்

ராஜபாளையம்: “அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும்தான் பாஜாகவின் அதிகாரபூர்வ கூட்டணி. பாஜகவின் பேச்சைக் கேட்காதவர்களுக்கு எதிராக சோதனை நடத்தப்படுகிறது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியது: “பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். தீர்ப்பை எதிர்த்த முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை … Read more

‘கேஜ்ரிவால் கைது… சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ – பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

மதுரை: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது. இந்நிலையில், இது குறித்து எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். “விசாரணைக்கு ஆஜராகுமாறு கேஜ்ரிவாலுக்கு பலமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் விசாரணைக்கு வரத் தயாராக இல்லை. அதற்கு பல்வேறு காரணங்களைச் சொன்னார். சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என முன்னாள் மத்திய அமைச்சரான அவர் தெரிவித்துள்ளார். … Read more