சென்னையில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு மத்திய தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 3 மக்களவை தொகுதிகளில் தேர்தல் செலவினப் பணிகளை பார்வையிட, 6 மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக அபிஜித் அதிகாரி, ஜி.ஏ ஹரஹானந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னை தொகுதிக்கு செலவினப் பார்வையாளர்களாக சுபோத் சிங், மதுக்கர் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் சென்னை தொகுதிக்கு முகேஷ் குமாரி, மானசி திரிவேதி ஆகியோர் செலவினப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய தேர்தல் … Read more

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்: சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும்

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 என விலை குறைக்கப்படும். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம், புதிய கல்விக் கொள்கை ஆகியவை ரத்து செய்யப்படும் என்பது உட்பட பல்வேறு செயல் திட்டங்கள் அடங்கிய திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். மக்களவை தேர்தலை முன்னிட்டு, திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக, துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு … Read more

வேட்பாளர்களின் உடற்தகுதி சான்று எப்போது சாத்தியம்? – தேர்தல் ஆணையம் விளக்கம் @ ஐகோர்ட்

சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும் எனில், சட்டத் திருத்தம்தான் கொண்டு வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை தாக்கல் செய்யப்படுகிறது. அத்துடன், 30 … Read more

முதல்வர் ஸ்டாலின் மார்ச் 22 முதல் ஏப்.17 வரை தேர்தல் பிரச்சாரம் – திமுக அட்டவணை

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மார்ச் 22 முதல் ஏப்ரல் 17 வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார். மார்ச் 22-ம் தேதி தனது பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்குகிறார் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்ட தகவல்: 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இண்டியா … Read more

“புதுச்சேரியில் வேட்பாளர்களை கண்டுபிடிக்க முடியாமல் பாஜக கூட்டணி திணறல்” – நாராயணசாமி

புதுச்சேரி: “வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் 4 மாதங்களாக தடுமாறிக் கொண்டிருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். இண்டியா கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் … Read more

16 வேட்பாளர்களை அறிவித்த அதிமுக… புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு – இபிஎஸ் பிளான் என்ன?

AIADMK Candidates List: மக்களவை தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக மொத்தம் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக இன்று அறிவித்துள்ளது. 

தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

சென்னை: டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், தேர்தல் ஆணையத்தில் தனக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-ல் நடைபெற்ற ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தினகரன் போட்டியிட்டார். அப்போது அவருக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டது. சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு அம்மா மக்கள் … Read more

தர்மபுரி தொகுதியில் செந்தில்குமார் எம்பிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? திமுக தலைமை அதிருப்தி

செந்தில்குமார் எம்பி நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியபோதும், அவருக்கு இம்முறை தருமபுரி எம்பி தொகுதியில் போட்டியிட திமுக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.