“ஜாபர் சாதிக் விவகாரத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் தான் போதை மருந்துகளின் தலைநகரமாக உள்ளது என்பதைப் பல புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அண்மையில், பழனிசாமியும் அதே குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். ஆக, இந்த இரண்டு கட்சிகளும்தான் போதைப் பொருள்களுக்கு வித்திட்ட கட்சிகள். ஜாபர் சாதிக் விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திமுக மீதுஅவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் இருந்து … Read more

15 நாளில் ரேஷன் கார்டு வேண்டுமா? அமைச்சர் சக்ரபாணி சொன்ன முக்கிய தகவல்

New Ration Cards: புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.   

விபரீத சாகசம் செய்து இன்ஸ்டா வீடியோ: சாத்தான்குளத்தில் 2 இளைஞர்கள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அதில் குதித்து விபரீத சாகச வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். சாத்தான்குளம் அருகேயுள்ள வாலத்தூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் பாலகிருஷ்ணன் என்ற ரஞ்சித் பாலா (23). இவர் பல்வேறு சாகசங்களை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிராமத்துக்கு அருகேயுள்ள வைரவன் தருவை குளத்தில் … Read more

தேர்தல் பத்திரம்: அதிமுகவுக்கு அதிக நன்கொடை கொடுத்த சிஎஸ்கே… திமுகவுக்கு யார் தெரியுமா?

Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக, அதிமுக கட்சிகள் யார் யாரிடம் இருந்து அதிக நன்கொடைகளை பெற்றார்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மக்களவை தேர்தல் | 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்ப மனு விநியோகம்

சென்னை: மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விடுத்துள்ள அறிவிப்பில், “பதினெட்டாவது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் மக்களவை தேர்தல் விருப்ப மனுக்களை வரும் செவ்வாய்க் கிழமை (மார்ச் 19) … Read more

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால்… எடப்பாடி பழனிசாமி தான் காரணம் – பொங்கும் ஓபிஎஸ் அணி

AIADMK Symbol Issue: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் முழுக்க காரணம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

கரும்பு விவசாயி சின்னம் | நாம் தமிழர் கோரிக்கை ஏற்பு; நாளை அவசர வழக்காக விசாரணை

சென்னை: கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை (திங்கள்கிழமை) காலை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை தற்போது … Read more

பாஜக வேட்பாளர், தொகுதி பங்கீடு எப்போது நிறைவடையும்? வானதி சீனிவாசன் கொடுத்த அப்டேட்

vanathi srinivasan: வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் குறித்த முழுவிவரங்கள் எப்போது வெளியாகும் என்ற அப்டேட்டை கூறினார்.

தாம்பரம் – கடற்கரை வழித்தடத்தில் இன்று 150 பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை

சென்னை: தாம்பரம் – கடற்கரை இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த வழித் தடத்தில் 150 கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் – கோடம்பாக்கம் ரயில் வழித் தடத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், இன்று காலை 10 முதல் பிற்பகல் 3.30 மணி வரை மின்சார ரயில்கள் … Read more

வீட்டிற்குள் புகுந்து அரிசியை கபளீகரம் ஒற்றை காட்டு யானை.. பீதியில் மக்கள்..!!

கோவை அருகே வழி தவறி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.