லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்! 6 மணிக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது

lok sabha election code of conduct: லோக்சபா தேர்தல் 2024 தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கின்றன. 

“கவலைப்பட வேண்டாம்” – உதவி கோரியவரிடம் உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் @ ‘நீங்கள் நலமா’ திட்டம்

சென்னை: தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வதற்கான ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை கடந்த 6-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில், சென்னையில் ‘நீங்கள் நலமா?’ திட்டத்தின் கீழ் வீடியோ கால் மூலம் மக்களை தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அதன் தொடர்ச்சியாக, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மதுரை, தெப்பக்குளத்தை சேர்ந்த சி.விஜய் … Read more

பேரூராட்சி அலுவலகம் வாயிற்கதவை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்: என்ன நடந்தது?

கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் நடத்திய அவசரக் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகம் வாயிற்கதவை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்.

“தமிழகம் பாஜக எதிர்ப்பு பூமி; தமிழர்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழகம் என்பது, பாஜகவின் எதிர்ப்பு பூமி. தமிழக மக்கள் எந்த காலத்திலும் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விரைவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 10 ஆண்டு கால ஒன்றிய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கிற்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி திமுக – காங்கிரஸ் கூட்டணியையும், இண்டியா கூட்டணிக் கட்சிகளையும் கடுமையாக சாடிப் பேசிய நிலையில் செல்வப்பெருந்தகை இக்கருத்தினை முன்வைத்துள்ளார். இது … Read more

நிழல் தரும் மரங்களை வெட்டிய வணிக வளாக உரிமையாளர்… மக்கள் கடும் எதிர்ப்பு!

தூத்துக்குடி வணிக வளாகத்தை ஒட்டி சாலையில் இருந்த வேம்பு, வாகை உள்ளிட்ட நிழல் தரும் மரங்களை வணிக வளாக உரிமையாளர் வெட்டியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

செம்மொழி மாநாட்டுக்கு முன் கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் தமிழ் அரியணை ஏறுமா? – ராமதாஸ்

சென்னை: செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாக தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்றுமொழி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் … Read more

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து ராதிகா போட்டி?

தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை வீசுவதாகத் தெரிகிறது. தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக நடிகை ராதிகாவை போட்டியிட வைக்க முயற்சிக்கப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியாக உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது400 தொகுதிகளை பெற பாஜக தீவிரம் காட்டுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமானத் தொகுதிகளை பெற்றால்தான் 400-ஐ எட்ட முடியும் என்ற நிலை உள்ளது. இதற்காக, தனது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜக மிகவும் … Read more

அதிமுகவிடம் 2 சீட் கேட்கும் பார்வர்டு பிளாக்

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சென்னையில் நேற்று சந்தித்த அகில இந்திய பார்வர்டு பிளாக்கட்சி நிர்வாகிகள், மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தியா கூட்டணியில் இருக்கும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய தலைவர் நரேன் சட்டர்ஜி, தேசிய பொதுச் செயலாளர் ஜி.தேவராஜன், தேசிய செயலாளர் ஜி.ஆர்.சிவசங்கர், தமிழக பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை நேற்று சந்தித்தனர். பின்னர் தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் … Read more

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 82 குடிநீர் திட்டங்களை சீரமைக்க ரூ.149 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல்

சென்னை: புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 82 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதிவழங்கியுள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறைச் செயலர்தா.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடிநீர் வடிகால் வாரியம் மூலம்544 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு, 4.53 கோடி பேருக்குபாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஊரகப்பகுதிகளில் உள்ள 1.25 கோடி வீடுகளில், இதுவரை 1.02 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கள் வழங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், … Read more