தமிழகத்தில் குடியுரிமை சட்டம் வராது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதை நடைமுறைப்படுத்த எந்த வகையிலும் தமிழக அரசு இடமளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மக்களவை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய பாஜக அரசு அவசர கதியில்ஓர் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது. … Read more

கோவை காமாட்சிபுரி ஆதீனம் உடல்நலக்குறைவால் மறைவு

கோவை: கோவை ஒண்டிப்புதூர் அருகே, காமாட்சிபுரி ஆதீனம் 51-வது சக்திபீடம் மகாசந்நிதானம் உள்ளது. இங்கு ஆதீனமாக சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் (55) இருந்தார். இவர், உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 12) அதிகாலை காலமானார். சுவாசக் கோளாறு பாதிப்புக்காக கடந்த 4 மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை பல்லடத்தில் உள்ள கோயில் வளாகத்தில் இருந்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடன் இருந்தவர்கள் அவரை பீளமேட்டில் உள்ள … Read more

நள்ளிரவில் பாஜகவுடன் டி.டி.வி.தினகரன் கூட்டணி பேச்சுவார்த்தை @ சென்னை

சென்னை: எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மேற்கொண்டார். சென்னை – கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், நள்ளிரவு நேரத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இந்த சந்திப்பின்போது பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷண் ரெட்டி, வி.கே.சிங், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் இருந்தனர். இரண்டு கட்சியின் தரப்பிலும் கூட்டணி உறுதியாகி உள்ளது. இதனை தினகரன் … Read more

“பொன்முடிக்கு பதவி வழங்குவது குறித்து விரைவில் முடிவு” – பேரவை தலைவர் மு.அப்பாவு

திருநெல்வேலி: “முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால் அவருக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட்ட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறியது: “ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் … Read more

ராமேஸ்வரம் கோயிலில் ஆவுடையார் பொன்கவசம் சாத்தக் கோரி வழக்கு: மாவட்ட ஆட்சியர், எஸ்பி பதிலளிக்க உத்தரவு

மதுரை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு ஆவுடையார் பொன் கவசம் சாத்தக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற கோபி ஆச்சார் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. பகவான் ஸ்ரீராமரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ராமநாதசுவாமிக்கு நித்தியபடி ஆவுடையார் பொன் கவசம் சாத்தப்படுவது வழக்கம். இந்த ஆவுடையார் பொன் கவசம் 2015-க்கு பிறகு ராமநாதசுவாமிக்கு அணிவிக்கப்படவில்லை. கேட்டதற்கு ஆவுடையார் … Read more

“பிச்சைக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?” – குஷ்பு மீது அமைச்சர் கீதாஜீவன் காட்டம் @ உரிமைத் தொகை

சென்னை: “தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் நடுத்தர வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா? அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கைப் பார்த்துப் பேசுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குஷ்புவுக்கு அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகை குஷ்பு, முதல்வர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைப் … Read more

சாமானியப் பெண்களுக்கு வழங்கப்பட்ட மனிதநேய விருதுகள் 2024!

Humanitarian Awards 2024 : சாமானியப் பெண்களின் சாதனைகளை பாராட்டும் வகையில், ஹுமானிடேரியன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற்றது.   

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் நீதிபதி திடீர் விலகல்

மதுரை: மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனுவை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கிலிருந்து விலகியுள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் திண்டுக்கல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் … Read more

ஜஸ்ட் லைக் தட் அறிக்கை.. லெட்டர் பேட் கட்சியாக செயல்பட வேண்டாம்.. தாவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ்

Tamilaga Vettri Kazhagam Chif Vijay: அரசியல் கட்சி தொடங்கி விட்டதால், ஏதோ சொல்ல வேண்டுமே என்ற காரணத்தால் “ஜஸ்ட் லைக் தட்” என்ற அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். வெறும் லெட்டர் பேட் கட்சியாக செயல்படாமல், ஆக்கபூர்வமாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என மாற்று அரசியலை நோக்கி காத்திருக்கும் அனைவரின் கேள்வியாக உள்ளது.

பொன்முடிக்கு எதிரான சொ.கு. வழக்கின் இறுதி விசாரணையை ஏப்.15-க்கு ஒத்திவைத்து ஐகோர்ட்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த … Read more