பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி – ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைக்கப்பட்டதைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருக்கிறது என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரவையில் மீண்டும் பொன்முடியை சேர்க்க பரிந்துரைத்து ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், தனது அமைச்சர் பதவியை இழந்தது மட்டுமின்றி, சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியையும் இழக்க நேர்ந்தது. பொன்முடி … Read more

கழிவுநீர் தொட்டி மரணங்கள்: ஆளுநர் ஆ.என்.ரவி வேதனை @ திருப்பூர்

திருப்பூர்: “நம் சகோதரர்கள் பலர், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்து விடுவது வேதனையானது. அவர்களின் வாழ்வு பரிதாபத்துக்குரியது. மனிதாபிமானமற்றது. ஒவ்வொரு குடிமகனும் கண்ணியமாக, சுயமரியாதையுடன் உழைக்க வேண்டும்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுராஜ் தேசிய போர்ட்டல் தொடக்க விழா நிகழ்வு இன்று நடந்தது. இதில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுராஜ் தேசிய போர்ட்டல் … Read more

கொல்லிமலையில் வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் படுகாயம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள பரியூர் என்ற கிராமத்தில் மகேந்திரா பிக்கப் வேன் வாகனம் கவிழ்ந்து மிளகுப் பறிக்க சென்ற 6 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, தேவானூர் நாடு ஊராட்சி பரியூர் என்ற கிராமத்தில் இருந்து புதன்கிழமை காலை மிளகு பறிக்க மகேந்திரா பிக்கப் மினி வேன் வாகனத்தில் பெண்கள், ஆண்கள் என சுமார் 23 சென்றனர். பணியை முடித்துவிட்டு அங்கிருந்து அவர்கள் திரும்பிய போது அங்குள்ள கொண்டை ஊசி வளைவில் மினி … Read more

வாட்ஸ்ப் அப் குழுவில் ‘தம்ஸ் அப்’ குறியீட்டுக்காக பணி நீக்கத்தை ஏற்க முடியாது: ஐகோர்ட்

மதுரை: அலுவலக வாட்ஸ்ப் அப் குழுவில் ‘தம்ஸ் அப்’ குறியீடு பதிவிட்டதற்காக ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டதை தனி நீதிபதி ரத்து செய்தது சரி என உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. 2017-ல் சக காவலர் ஒருவரால் ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமாண்டர் கொலை செய்யப்படுகிறார். இது தொடர்பான தகவல் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலக வாட்ஸ் அப் குழுவில் பகிரப்படுகிறது. அதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் நரேந்திர … Read more

ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு: கரூரில் சோகம்

கரூர்: கரூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து ராணுவ வீரர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி அருகேயுள்ள பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து பாஸ்கர் (32). இவர் ராணுவ மருத்துவப் பிரிவில் மீரட்டில் பணியாற்றி வந்தார். திருமணமாகி, குழந்தை உள்ளது. ஒரு மாத விடுப்பில் சண்டிகர் மதுரை விரைவு ரயிலில் இன்று (மார்ச் 13) ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கரூர் ரயில் நிலைய சந்திப்பில் ரயில் காலை 11.35 மணிக்கு நின்ற நிலையில் திண்டுக்கல் ரயில் … Read more

உதகையில் உயிரிழந்த வடமாநில தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: உதகையில் கட்டுமான பணியின்போது மண்ணில் புதைந்து உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்விபத்தில், காயமடைந்த மற்றொரு தொழிலாளிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், பாபுஷா லைன் பகுதியில் இன்று மார்ச் 13 முற்பகல் தனியாருக்குச் … Read more

“நடிகை குஷ்பு முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” மாநில மகளிரணி செயலாளர் ப.ராணி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.ராணி பேட்டி  

“திமுகவுக்கு உண்மையை பேசும் தைரியம் கிடையாது” – குஷ்பு காட்டம் @ உரிமைத் தொகை

சென்னை: “பெண்களை கேவலப்படுத்துவது, அவதூறாக பேசுவது, பெண் குறித்து தவறான விஷயங்களைப் பரப்புவது, இது திமுகவின் டிஎன்ஏ. குஷ்புவின் டிஎன்ஏ கிடையாது. இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் என்னிடம் காட்டாதீர்கள். நான் தவறு செய்தால், குழந்தையாக இருந்தாலும் கீழே விழுந்து மன்னிப்புக் கேட்பேனே தவிர பயந்து ஓடமாட்டேன்” என்று குஷ்பு கூறியுள்ளார். தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி அண்மையில் பாஜக சார்பில் செங்குன்றம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் … Read more

குஜராத் துறைமுகத்திலிருந்து தான் போதைப் பொருட்கள் வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு

மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்

விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிலை: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையிலிருந்து விக்கிரவாண்டி- கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சென்னையிலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி,நெய்வேலி கும்பகோணம் வழியாக செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு, நான்கு வழி சாலையாக மாற்றும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இன்னும் … Read more