திமுக பக்கா பிளான் – ராமநாதபுரத்தில் மீண்டும் IUML… வேட்பாளரும் உடனே அறிவிப்பு!

INDIA Alliance: மக்களவை தேர்தலில் திமுக (INDIA) கூட்டணியில், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

‘ஊரையே சுத்தம் செய்யும் எங்க வாழ்க்கை துயரமா இருக்கே…’ – தூய்மைப் பணியாளர்கள் ஆதங்கம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அவர்களது பணியில் பல்வேறு சங்கடங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பணிப் பாதுகாப்பின்மை, வரையறுக்கப்பட்ட ஊதியம் கிடைக்காதது, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்வது, நோய்க்குதரமான மருத்துவ சிகிச்சை கிடைக்காதது போன்ற பல இன்னல்களை அவர்கள் சந்திக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிரந்தர ஊழியர்களாக, இலவச குடியிருப்பு வசதிகளுடன் அவர்கள் பணிபுரிந்து வந்தனர். இப்போது தினக்கூலி அடிப்படையில்(அவுட்சோர்சிங்) தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். … Read more

கோவை ஷாக்: குடும்பமே தற்கொலை! காரணம் என்ன?

கோவை, கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

“கடும் நிதி நெருக்கடியிலும் மக்களுக்காக குடிநீர் திட்டங்கள்…” – முதல்வர் ஸ்டாலின் @ நெம்மேலி

சென்னை: “கடுமையான நிதி நெருக்கடி காலத்திலும் மக்களுக்காக நாம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர்த் திட்டங்களை தீட்டி வழங்கி வருகிறோம்” என நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்களுக்கு அர்ப்பணித்துப் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் பெரிய பங்கு இருக்கிறது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். நெம்மேலியில் ரூபாய் 1516 கோடியே 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் … Read more

விஜயதரணி விலகல்: காங்கிரஸ் ரியாக்ஷன் – பறிபோகும் எம்எல்ஏ பதவி..!

விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார்.   

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி: பிரதமர் மோடியின் தலைமை ஈர்த்ததாக விளக்கம்

புதுடெல்லி: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே விஜயதரணி பாஜகவில் இணைகிறார் எனப் பேசப்பட்ட நிலையில், அவர் இன்று டெல்லியில் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச அளவில் இந்திய தேசம் பல சாதனைகளைப் புரிந்து வருவதால் அவரின் தலைமையில் அரசியல் பணியாற்ற … Read more

ஓட்டப்பிடாரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Former CM J Jayalalithaa Birthday Celebrations: புளியம்பட்டி பதுவா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு  அதிமுக ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோகன் தலைமையில் அதிமுகவினர் மதிய உணவு வழங்கினர்.

அதிமுகவுடன் பாமக, தேசிய லீக் பேச்சு

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதாக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே பாமக நிறுவனர் ராமதாஸை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தைலாபுரத்தில் சந்தித்து பேசினார். ஆனால் பாமகவின் முடிவை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை நேற்று சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை இந்திய தேசிய … Read more

எடப்பாடி பழனிசாமி பெயரில் 76 விருப்ப மனுக்கள்

மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் அதிமுகவில் 21-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. கடந்த 2 நாட்களில் கட்சியில் பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர். தனித் தொகுதிக்கு ரூ.15 ஆயிரம், பொது தொகுதிக்கு ரூ.20 ஆயிரம் என விருப்ப மனுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றும் விருப்ப மனு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதிமுக தகவல் தொழில்நுட்ப … Read more

தேர்தலுக்கு பிறகு கட்சியிலும் அரசிலும் மாற்றம்: மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை

மக்களவை தேர்தலையொட்டி, திமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் மக்களவைத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். புதுவை உட்பட 40 தொகுதியிலும் நாம்தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வெற்றி மகத்தானதாக, பெறும் … Read more