“ரஷ்ய தாக்குதல் பற்றி ஏற்கெனவே நாங்கள் எச்சரித்திருந்தோம்” – வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக ஏற்கெனவே ரஷ்ய அதிகாரிகளை எச்சரித்திருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரெய் வாட்சன் கூறுகையில், “இம்மாதத் தொடத்திலேயே மாஸ்கோவில் ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்த சதி செய்யப்படுவதாகவும், குறிப்பாக இசை நிகழ்ச்சியை குறிவைத்து சதி செய்யப்படுவதாகவும் ரஷ்ய அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு தகவல் அளித்தது. தீவிரவாத சதிச் செயல்களைப் பற்றி தகவல் கிடைத்தால் … Read more

ரஷ்யாவில் ISIS நடத்திய பயங்கரவாத தாக்குதல்… பிரதமர் மோடி கடும் கண்டனம்!

Russia Concert Hall Attack: ரஷ்யாவின் மாஸ்கோவில் இசைக் கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் குறைந்தது 60 பேர் உயிரிழந்தனர் மற்றும் 145க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

மாஸ்கோ தாக்குதலில் பலி 60 ஆக அதிகரிப்பு – ஐஎஸ் பொறுப்பேற்பு

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் அதன் நம்பகத்தன்மை இன்னும் அரசுத் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தத் தாக்குதலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார். ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்றார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக 3வது … Read more

அமெரிக்கா வரும் இந்திய மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: இந்திரா நூயி வேண்டுகோள்

நியூயார்க்: பெப்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் இந்திரா நூயி (68). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வர்த்தக உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க அதிகாரிகளில் ஒருவராக இருந்தார். அவர் தற்போது 10 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்திரா நூயி பேசியிருப்பதாவது: இந்த வீடியோவை வெளியிட காரணம், இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் சில பிரச்சினைகளில் சிக்குவது தொடர்பாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கிறேன். ஏற்கெனவே … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடானின் மிக உயரிய விருது: மன்னர் ஜிக்மே கேசர் வழங்கினார்

பாரோ: பூடான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே சமீபத்தில் இந்தியா வந்தபோது, பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, பூடான் வருமாறு மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் சார்பில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, பிரதமர் மோடி நேற்று பூடான் சென்றார். பாரோ விமான நிலையத்தில் அவரை பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். ‘‘எனது அண்ணன் நரேந்திர மோடி, பூடானுக்கு வருக’’ என்று இந்தியில் அவர் வரவேற்பு அளித்தார். … Read more

‘புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறேன்’ – பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன்

லண்டன்: பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 42 வயதான அவர், பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம்ஸின் மனைவி ஆவார். ஜனவரி மாதம் மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் அவர் உறுதி செய்துள்ளார். “எனக்கு … Read more

பூட்டான் அரசின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் மோடி

திம்பு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூட்டானுக்கு பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பூட்டானில் உள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை பூட்டான் பிரதமர் செரிங் டோபே நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து பாரோ விமான நிலையத்தில் இருந்து பூட்டானின் தலைநகர் திம்புவுக்கு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி பயணித்தார். அப்போது வழிநெடுகிலும் இந்தியா மற்றும் பூட்டானின் தேசிய கொடிகளை ஏந்தி நின்றபடி … Read more

'பூட்டான் மக்களின் இனிமையான வரவேற்பு' – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

திம்பு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூட்டானுக்கு பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பூட்டானில் உள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை பூட்டான் பிரதமர் செரிங் டோபே நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து பாரோ விமான நிலையத்தில் இருந்து பூட்டானின் தலைநகர் திம்புவுக்கு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி பயணித்தார். அப்போது வழிநெடுகிலும் இந்தியா மற்றும் பூட்டானின் தேசிய கொடிகளை ஏந்தி நின்றபடி … Read more

இந்தோனேசியாவில் ரிக்டர் 6.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்ட்டா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று காலை 11.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பல்வேறு தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியா, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : Indonesia  Earthquake  இந்தோனேசியா  நிலநடுக்கம் 

அதானியின் காற்றாலை மின் திட்டத்துக்கு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பு

ராமேசுவரம்: அதானியின் கிரீன் எனர்ஜி லிமிடெட் கடந்த ஆண்டு 442 மில்லியன் டாலர் மதிப்பில் மன்னார் மற்றும் பூநகரி கடற்பகுதியில் 483 மெகாவாட் அளவிலான 2 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இலங்கை அரசிடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த திட்டத்தால் மன்னார் பல்லுயிர் சுற்றுச்சூழலுக்கும், காற்றாடி இறக்கைகள் ஏற்படுத்தும்ஒலி மாசினால் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். கடல் நீருக்கடியில் பொருத்தப்படும் பிரம்மாண்ட மின் கேபிள்களால் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படும் எனக் கூறி, இலங்கையின் சுற்றுசூழல் ஆர்வலர்கள் … Read more