ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு

டோக்கியோ, ‘ரிங்க் ஆப் பயர்’ எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். இந்நிலையில் ஜப்பானின் கிழக்கில் உள்ள இபராக்கி மாகாணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ.) தெரிவித்துள்ளது. ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் இதுவரை … Read more

பாகிஸ்தான் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு: உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட ரகசிய செய்தி பொதுவெளியில் கசிந்தது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரி டொனால்டு லூ, நாடாளுமன்ற குழுவிடம் எழுத்துப்பூர்வமாக சாட்சியம் அளித்தார். அதில் பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் என்ன மாதிரியான முறைகேடுகள் நடந்தன என்பதை விவரிக்காத அவர், தேர்தல் மோசடி … Read more

India china border: பிற நாட்டு பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும்? கொந்தளிக்கும் சீனா…

China Oppose Indian Support Of America : அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிராந்தியம் என்று ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா… 

‘அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பகுதியாக அங்கீகரிக்கிறோம்’ – அமெரிக்கா @ சீன அறிக்கை

வாஷிங்டன்: அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்துள்ள அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் நடக்கும் எந்த ஒரு அத்துமீறலையும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி அருணாச்சலுக்கு சென்றதைத் தொடர்ந்து அப்பகுதி மீது சீனா மீண்டும் உரிமை கோரியிருக்கும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் இணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல், “அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக நாங்கள் அங்கீகரிக்கிறோம். … Read more

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம்: 126-வது இடத்தில் இந்தியா

ஒட்டாவா: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க் ஐஸ்லாந்து நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. ஐ.நா. ஆதரவுடன் ஆண்டுதோறும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் தனிநபர் வருவாய், சமூக ஆதரவு, சுகாதாரம் உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதை கனடா பொருளாதார நிபுணர் ஜான் எப் ஹெலிவெல், ரிச்சர்ட் லயார்ட், ஜெப்ரி சாக்ஸ், … Read more

2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கில் பெண்கள் முக்கிய பங்கு வகிப்பர்: ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி ருச்சிரா தகவல்

புதுடெல்லி: ஐ.நா. சபையில் இந்தியா சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் பேசியதாவது: வரும் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை (விக்சித் பாரத்) உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார் பிரதமர் மோடி. இந்த இலக்கை எட்டுவதற்கான பயணத்தில் பெண்களின் முழுமையான மற்றும் சம அளவிலான பங்கு இருக்கும். இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டுக்கு பிரதமர் மோடி சிறப்பாக தலைமை ஏற்று நடத்தினார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, பெண்களுக்கு … Read more

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு: 5-வது முறை அதிபரானதற்கு வாழ்த்து

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், பிரதமர் மோடி நேற்று போனில் பேசினார். அப்போது ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி பெற்று 5-வது முறையாக அதிபரானதற்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை நேற்று போனில் தொடர்பு கொண்டு பேசினார். ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி பெற்று 5-வது முறையாக அதிபரானதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த … Read more

Happiest country in the world: Finland remains at the top | உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு: தொடர்ந்து முதலிடத்தில் பின்லாந்து

புது டில்லி: ஐ.நா., ஆதரவுடன் வெளியாகும் உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகள் அட்டவணையில் பின்லாந்து தொடர்ந்து 7-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி 2024ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்து தொடர்ந்து 7 வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறது. டென்மார்க் 2ம் இடம், ஐஸ்லாந்து 3ம் இடம், இஸ்ரேல் … Read more

அடுத்த சுற்று வாக்கெடுப்பிலும் அமோக ஆதரவு.. நேரடி போட்டிக்கு தயாராகும் ஜோ பைடன்- டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்சிக்கான முதன்மைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில், கட்சி பிரதிநிதிகளிடையே ஒட்டுமொத்தமாக அதிக செல்வாக்கு பெறும் நபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். ஜனநாயக கட்சியில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில் இருந்தார். அவருக்கு கட்சியில் பெரிய அளவுக்கு எதிர்ப்பு … Read more