முடிவுக்கு வந்தது நெகட்டிவ் விகிதம்.. வட்டி விகிதத்தை உயர்த்தியது ஜப்பான் மத்திய வங்கி

டோக்கியோ: ஜப்பான் மத்திய வங்கியானது, கடந்த 8 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்திய எதிர்மறை வட்டி விகிதங்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறான கொள்கையின் பிற அம்சங்களை இன்று முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வட்டி விகிதம் மைனஸ் 0.1 சதவீதம் என இருந்த நிலையில், புதிய வட்டி விகித கொள்கை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய வங்கியில் வைப்புத்தொகைக்கு 0.1 சதவீதம் வட்டி செலுத்தப்படும். குறுகிய கால கடன்களுக்கான வட்டி … Read more

கோவிட் போய் நாளாச்சு! ஒலிம்பிக் கிராமத்தில் ‘இந்த’ தடையை நீக்கிய பிறகு 3 லட்சம் ஆணுறைகளுக்கு ஆர்டர்!

Intimacy Ban Lifted : ’நெருக்கமாக இருக்கத் தடை’ என்ற கட்டுப்பாடு விலக்கப்பட்டதை அடுத்து மூன்று லட்சம் ஆணுறைகள் ரெடி! ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைகள் குவிப்பு…

கனடா: மனைவியை கொலை செய்துவிட்டு தாய்க்கு வீடியோ கால் செய்த நபர்

ஒட்டாவா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்பிரீத் சிங்-பல்வீந்தர் கவுர் தம்பதிக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கனடாவில் படித்து வரும் தனது மகளுடன் பல்வீந்தர் கவுர் வசித்து வந்துள்ளார். அதே சமயம் ஜக்பிரீத் சிங் வேலையில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவி மற்றும் மகளை பார்க்க அவர் கனடா சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 15-ந்தேதி ஜக்பிரீத் சிங், … Read more

17 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்த ஜப்பான்!

Japan Economy: பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, ஜப்பான் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கே- தென்மேற்கு திசையில் 632 கி.மீ தொலைவில் பாகிஸ்தானையொட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில … Read more

Another Indian Dies In US, Family Alleges Murder, Cops Rule Out Crime Angle | அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு: தொடருது துக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அபிஜீத் பருச்சுரு (20) என்ற மாணவர் மர்மமான முறையில் அமெரிக்காவில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த அபிஜீத் பருச்சுரு(20) என்ற மாணவர் அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்துள்ளார். அங்கு தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் சேர்ந்து அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு … Read more

பணவீக்கம் அதிகரிப்பதால் 22% வட்டி விகிதம் தொடரும்: பாகிஸ்தான் மத்திய வங்கி அறிவிப்பு

புதுடெல்லி: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் மத்திய வங்கி வட்டி விகிதத்தை 22 சதவீதமாகவே தொடரும் என அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பணவீக்க விகிதம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 32.89% என்ற மோசமான நிலையில் உள்ளது. இதனை கருத்தில்கொண்டு, பாகிஸ்தான் மத்தியவங்கி ஆறாவது முறையாக வட்டிவிகிதத்தை 22% என்ற அளவிலேயே நிலைநிறுத்தியுள்ளது. இதன் மூலம் 2025-ம் ஆண்டு செப்டம்பருக்குள் பணவீக்க விகிதம் 5-7%-ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் புதிய அரசு … Read more

Putins 88% vote record is a warning to the US and Europe | 88% ஓட்டு வாங்கி புடின் சாதனை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை

மாஸ்கோ, “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். இது, கைக்கு எட்டும் துாரத்தில் தான் உள்ளது; ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை,” என, ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெருமை ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில், ஐரோப்பிய நாடான உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு … Read more

இங்கிலாந்து இளவரசிக்கு என்னாச்சு..? எக்ஸ் தளத்தில் பரவும் பகீர் தகவல்

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேத் மிடில்டன் கடந்த ஜனவரி மாதம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து எதிர்மறையான தகவல்கள் பரவின. சமீபத்தில் அன்னையர் தினத்தையொட்டி அவர் வெளியிட்ட குடும்ப புகைப்படம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, அவர் தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டிருந்ததே … Read more

ரஷியாவில் போருக்கு கட்டாயப்படுத்துகிறார்கள்… எங்களை வெளியேற்றுங்கள்: மீண்டும் வீடியோ வெளியிட்ட இந்தியர்கள்

ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக அழைத்து செல்லப்பட்ட இந்திய வாலிபர்கள் சிலரை அந்நாட்டு ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் உக்ரைனுக்கு எதிராக போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இவ்வாறு ராணுவத்தில் சேர்க்கப்பட்டடதாக கூறி, இந்தியாவின் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிலர் தங்களை உடனடியாக மீட்கும்படி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில், இந்த குழுவினர் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளனர். உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக தங்களை ஏமாற்றி ரஷிய ராணுவத்தில் சேர்த்ததாக … Read more