மியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை – யாங்கோன் கோர்ட்டு தீர்ப்பு

யாங்கோன், மியான்மர் அரசின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவரது ஆலோசகராகவும், பிரபல வக்கீலாகவும் இருந்த கோ னி (வயது 63), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யாங்கோன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கி லின் என்பவரை உடனடியாக கார் டிரைவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த கொலை தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி ஆங் வின் சா உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். … Read moreமியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை – யாங்கோன் கோர்ட்டு தீர்ப்பு

சவுதி இளவரசர் தலிபான்கள் சந்திப்பு

ரியாத், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை, தலிபான்கள் பாகிஸ்தானில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் வருகிறார். வர்த்தக உடன்படிக்கைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தலிபான்கள் சவுதி இளவரசரைச் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதில் இந்தச் சந்திப்பு முக்கியத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனை பாகிஸ்தானின் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வளர்த்த கடா மார்பில் பாயுமா…? ஆபத்து காத்திருக்கிறது இம்ரான் கானுக்கு…  பாகிஸ்தானுக்கும் அச்சுறுத்தலான அசார், ஹபீஸ்

‘காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, ‘ஜெய்ஷ்-இ-முகமது’ அமைப்பு, இந்தியாவுக்குமட்டுமல்ல; பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும்’ என, சர்வதேசபாதுகாப்பு வல்லுனர்கள்எச்சரிக்கை செய்துள்ளனர்.இந்தியாவில் இருந்து பிரிந்து சென்றது முதலே, காஷ்மீர் மீது, ‘கண்’ வைத்துள்ள பாகிஸ்தானின், எல்லை தாண்டிய பயங்கரவாதம், 70 ஆண்டுகளாக தொடர்கிறது. ஒவ்வொரு முறையும், பயங்கரவாதத்தை கிளறி விட்டு குளிர்காயும் பாகிஸ்தான், கடைசியில், ‘மரண அடி’ வாங்கி வருகிறது. இந்திய – பாக்., போர், வங்கதேச நாடு உதயம், கார்கில் போர், ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என, ஒவ்வொரு … Read moreவளர்த்த கடா மார்பில் பாயுமா…? ஆபத்து காத்திருக்கிறது இம்ரான் கானுக்கு…  பாகிஸ்தானுக்கும் அச்சுறுத்தலான அசார், ஹபீஸ்

தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை

தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராக, முதல் திருநங்கை வேட்பாளர் களமிறங்கி உள்ளார். #Thailand #Transgender #PrimeMinister பாங்காக்: தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் நாட்டின் பிரபல கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி, பவுலின் காம்ப்ரிங் (வயது 52) என்ற திருநங்கையை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வரை … Read moreதாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை

நாடு கடத்துவதை எதிர்த்து மல்லையா மனு

லண்டன்,வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழில்அதிபர் விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, மனு தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளான்.இந்தியாவில், கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 63, விமான சேவை நிறுவனம் நடத்த, 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பித் தராமல், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிஓடினான். அவனை இந்தியா வுக்கு நாடு கடத்த, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இந்நிலையில், … Read moreநாடு கடத்துவதை எதிர்த்து மல்லையா மனு

அடுச்சு தூக்குங்க.. இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு!

காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா சார்பில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றள்ளது. இதன் எதிரொலியாக பயங்கரவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்தாத பாகிஸ்தான் அரசைக் கண்டிக்கும் விதமாக, அந்நாட்டை தனது ‘மிகவும் விரும்பத்தக்க நாடு’ என்ற அந்தஸ்திலிருந்து … Read moreஅடுச்சு தூக்குங்க.. இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு!

லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முற்றுகை !! இந்தியர்கள் ஆவேசம் !!

இந்தியாவில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம், காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச்செய்து கொடிய தாக்குதல் நடத்தினர். நாட்டையே உலுக்கி உள்ள இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  காஷ்மீரில் துணை ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலைக் கண்டித்து நாட்டின் … Read moreலண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முற்றுகை !! இந்தியர்கள் ஆவேசம் !!

அடேங்கப்பா….மனித உயரத்திற்கு முட்டைகோஸா..!!!…

Melbourne:  முட்டைகோஸ் கைக்கு அடங்கும் அளவில் நாம் பார்த்திருக்கோம். ஆனால், ஒரு மனிதன் அளவிற்கு பார்த்திருக்கோமா? ஆஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதினர் கடந்த ஒன்பது மாதங்களாக தங்களின் உழைப்பால் மனித அளவிற்கு ஒரு முட்டைகோஸை வளர்த்துள்ளனர். ஜாக்கி மார்ஷில் வசிக்கும் ரோஸ்மேரி நார்வுட் மற்றும் சீன் காட்மேன் தான் இதனை செய்துள்ளனர். இந்த தம்பதினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்களது தோட்டத்தில் இந்த முட்டைகோஸை வளர்க்க ஆரம்பித்தனர். சிஎன்என் -க்கு பேட்டி அளிக்கும் போது, ‘நல்ல மழையும், வெயில் … Read moreஅடேங்கப்பா….மனித உயரத்திற்கு முட்டைகோஸா..!!!…

கசோக்கி மரணம் குறித்த முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை – துருக்கி அதிபர்!…

சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுது துணைதூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக இன்னும் அனைத்து விஷயங்களையும் துருக்கி வெளியிடவில்லை என்று அநாட்டு அதிபர் ரிசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்து பேட்டியில் ” நாங்கள் இன்னும் அனைத்து விஷயங்களையும் இன்னும் வெளியிடவில்லை. நாங்கள் அதனை முழுமையாக தயாரித்து வருவதாக கூறினார். துருக்கியில் தனது இரண்டாவது திருமணத்துக்கான் ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்புல் அமீரகத்துக்கு அக்டோபர் 2ம் தேதி சென்ற ஜமால் கசோக்கி திரும்பவில்லை. அவர் … Read moreகசோக்கி மரணம் குறித்த முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை – துருக்கி அதிபர்!…

ஜிம்பாப்வே தங்க சுரங்கத்தில் தண்ணீர் புகுந்து 70 பேர் பலி!…

ஜிம்பாப்வேயில் உள்ள தென்மேற்கு ஹராரேயில் சட்டவிரோதமாக தங்க சுரங்கத்தில் பணியாற்றிய 70க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் இறந்திருக்கலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சுரங்கத்தின் இரண்டு யூனிட்களில் இருந்த 70 சுரங்க பணியாளர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டதாக அமைச்சர் ஜூலைமோயோ தெரிவித்துள்ளார். அதிபர் எம்மெர்சன் இதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளார். அரசின் சுரங்க பொறியாளர் மைக்கேல் கூறுகையில், தலைநகரிலிருந்து 145 கிமீ தொலைவில் உள்ள சுரங்கத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் உயிரோடு இருக்க மிகக் குறைந்த வாய்ப்புகளே உள்ளதாக … Read moreஜிம்பாப்வே தங்க சுரங்கத்தில் தண்ணீர் புகுந்து 70 பேர் பலி!…