பசிபிக் கடலில் உள்ள மெக்வாரி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் – ரிக்டர் 5.4 ஆக பதிவு

ஹோபார்ட், ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தின் ஒரு அங்கமான மெக்வாரி தீவுப்பகுதி, தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதியில் இன்று காலை 5.56 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : Macquarie … Read more

Britains King Charles IIIs secret plan to crown son Harry? | மகன் ஹாரிக்கு முடிசூட்ட பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் ரகசிய திட்டம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: தன் வயோதிகம், உடல் நலக்குறைவு காரணமாக பிரிட்டன் மன்னராக தனது மகன் ஹாரியை மன்னராக முடிசூட்ட மூன்றாம் சார்லஸ் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின் முறைப்படி மன்னர் மூன்றாம் சார்லஸாக முடிசூட்டிக்கொண்டார். கடந்த மாதம் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் காரணமாக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்க … Read more

பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து கோர விபத்து – 31 பேர் பலி

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டின் அண்டைநாடாக பர்கினோ பாசா அமைந்துள்ளது. இந்நிலையில், மாலியின் கெனிபியா பகுதியில் இருந்து நேற்று மாலை 5 மணியளவில் அண்டை நாடான பர்கினோ பாசோவுக்கு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கெனிபியா பகுதியில் உள்ள பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். … Read more

35 ராக்கெட்டுகளை ஏவி ஹிஜ்புல்லா தாக்குதல்; இஸ்ரேல் பதிலடி

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலியாக சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் பிடியில் உள்ள மீதமுள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், … Read more

உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை.. நேட்டோ பொதுச்செயலாளர் தகவல்

பிரஸ்ஸல்ஸ்: ரஷியா-உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் தொடர்ந்து உதவி செய்கின்றன. நேட்டோவின் சில உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் படைகளை வழங்கலாம் என தகவல் பரவியது. ரஷியாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள போராடும் உக்ரைனுக்கு உதவ, ராணுவ வீரர்களை அனுப்புவதற்கு சில நாடுகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாமா? என்று பரிசீலனை செய்வதாக ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று கூறியிருந்தார். ஸ்லோவாக்கியா ராணுவ வீரர்களை அனுப்புவது … Read more

நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல்

புடாபெஸ்ட், நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கினார். இதனிடையே கடந்த ஆண்டு பின்லாந்து நேட்டோ அமைப்பில் சேர்ந்தது. தொடர்ந்து சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய நேட்டோ நாடுகள் ஒப்புதல் அளித்தன. இதில் ஹங்கேரி அரசு மட்டும் நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் … Read more

அபிதாபி கோவிலில் தரிசனம் செய்ய வேண்டுமா? இந்த விஷயங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!

Hindu Temple Devotees Worship : அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஹிந்து கோயில், பொதுமக்கள் தரிசனத்திற்காக மார்ச் மாதம் முதல் நாளில் இருந்து திறக்கப்படும். 

WTO கூட்டத்தில் சேவைத்துறை தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு வெற்றி! ஒருமித்த கருத்து உண்டானது

World Trade Organization Ministerial Conference : உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் இருப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வணிகம் செய்வது சேவைத் துறைக்கு சுலபமாக மாறிவிட்டது…

இந்தியாவைப் போல சீன இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்: அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

வாஷிங்டன்: சீன இறக்குமதிக்கு இந்தியா தடைவிதித்துள்ளதைப் போல அமெரிக்காவும் பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் இருவர் அதிபர் ஜோ பைடனிடம் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து ஷரோட் பிரவுண் மற்றும் ரிக் ஸ்காட் ஆகிய இரண்டு எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: சீனாவிலிருந்து நாள்தோறும் வரி விலக்கு பிரிவில் ஏராளமான பொருட்கள் அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகின்றன. உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க சீன அரசு முக்கிய துறைகளுக்கு மானியங்களை வழங்கி வருவதுடன், தொழிலாளர்களுக்கான செலவினமும் அங்கு குறைவாக … Read more

காசா: ரமலானின்போது போர் நிறுத்த ஒப்பந்தம்… பைடன் சூசகம்

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலியாக சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் பிடியில் உள்ள மீதமுள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், … Read more