60 வயதில் காதலியை கரம் பிடிக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர்

சிட்னி, ஆஸ்திரேலிய பிரதமராக இருப்பவர் அந்தோணி அல்பானீசு. இவரது நீண்டநாள் காதலியான ஜோடீ ஹெய்டன் என்பவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவை அவர் இன்று வெளியிட்டு உள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே திருமண நிச்சயம் நடந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் மெல்போர்ன் நகரில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் முதன்முறையாக ஹெய்டனை, அல்பானீசு சந்தித்து பேசினார். இதன்பின்னர், 2022-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலின்போது, பிரசாரத்தில் அவருடன் அல்பானீசு ஒன்றாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். … Read more

வேலையே செய்யாம இருந்தாலும், எலோன் மஸ்க் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

Elon Musk Income Per Second: பல்வேறு புதிய முயற்சிகளில் எலோன் மஸ்கின் ஈடுபாடு அவரின் வெற்றிக்கும், வருமானத்திற்கும் அடிப்படையாக உள்ளது. அவரது ஒரு நொடியின் மதிப்பு என்ன தெரியுமா?

Kerala couple with twins dies mysteriously in US | இரட்டை குழந்தைகளுடன் கேரள தம்பதி அமெரிக்காவில் மர்ம மரணம்

கலிபோர்னியா, அமெரிக்காவில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரட்டை குழந்தைகள், தங்கள் வீட்டில் நேற்று முன்தினம் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். கேரளாவைச் சேர்ந்த தம்பதி ஆனந்த் சுஜித் ஹென்றி, 42, மற்றும் ஆலிஸ் பிரியங்கா, 40. மென்பொறியாளர்களான இருவரும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறினர். அங்கு, ‘பேஸ்புக்’கின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’ மற்றும் ‘கூகுள்’ ஆகியவற்றில் பணியாற்றிய ஆனந்த், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை … Read more

Google CEO Sundar Pichai Uses 20 Phones At A Time, Heres Why | 20 மொபைல் போன்களை பயன்படுத்தும் சுந்தர்பிச்சை: ஏன் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை ஒரே நேரத்தில் 20 மொபைல் போன்களை பயன்படுத்தி வருகிறார். இது அவர் மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஒரே நேரத்தில் 20 மொபைல்போன்களை பயன்படுத்தி வருகிறேன். இதற்கு கூகுள் தயாரிப்புகள் வெவ்வேறு மொபைல் போன்களில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் எனது பணியின் ஒரு அங்கமாக அவ்வாறு செய்கிறேன். ஒவ்வொரு … Read more

உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் எனும் தகுதியை ஜெர்மனியிடம் இழந்தது ஜப்பான்!

டோக்கியோ: உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக விளங்கிய ஜப்பான், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக தனது அந்த நிலையை ஜெர்மனியிடம் இழந்துள்ளது. உலகின் முதல் மிகப் பெரிய பொருளாதாரமாக அமெரிக்காவும், இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீனாவும் உள்ளன. மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஜப்பானும், நான்காவது பெரிய பொருளாதாரமாக ஜெர்மனியும் இருந்தன. இந்நிலையில், ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக 3-வது இடத்தை ஜப்பான் இழந்துள்ளது. ஜப்பான் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் ஜப்பானின் … Read more

Cancer vaccine: we are nearing the end: Russian President Putin informs | புற்றுநோய்க்கு தடுப்பூசி: இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்: ரஷ்ய அதிபர் புடின் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: “புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டறிவதில் ரஷ்ய விஞ்ஞானிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளனர்” என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மாஸ்கோவில் நடந்த வருங்காலத்திற்கான தொழில்நுட்பம் குறித்த மாநாட்டில் புடின் பேசியதாவது: ரஷ்ய விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைக்க உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கான தடுப்பூசியை கண்டறியும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் தடுப்பூசிகள் விரைவில் மக்கள் … Read more

காதலர் தினத்தில் பிரபோஸ் செய்த ஆஸ்திரேலிய பிரதமர்… காதலியின் ரிப்ளை என்ன?

Australia PM Anthony Albanese: காதலர் தினத்தில் தனது காதலியிடம் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் காதலை தெரிவித்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

Balis $10 Tourism Tax For Foreigners Comes Into Effect: Heres What To Know | பாலி தீவிற்கு சுற்றுலா செல்ல வரி விதிக்கும் இந்தோனேஷியா அரசு: காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு சுற்றுலா செல்பவர்கள், 10 அமெரிக்க டாலர் சுற்றுலா வரி கட்ட வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தோனேஷியாவிற்கு சுற்றுலா செல்பவர்கள் அதிகம் செல்லும் இடமாக பாலி தீவு முக்கிய இடம் பெறும். ஆஸ்திரேலியர்களால் அதிகம் விரும்பப்படும் இடமாக இத்தீவு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும், அந்நாட்டை சேர்ந்த ஒரு லட்சம் பேர் இங்கு வந்துள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில், இந்தியா, சிங்கப்பூர், சீனாவைச் … Read more