ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2 பேர் மரணம்

கர்நாடகாவில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.

கடந்த 26-ம் தேதி கோலார் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 8 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். நேற்று முன் தினம் இரவு சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

நேற்று பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தொடரும் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.