தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேர்க்கவிருக்கும் ஸ்டார்லினுக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து

தமிழக சட்ட மன்ற தேர்தலில் பத்து வருடங்களுக்கு பின்பு அதிகபடியான தொகுதிகளில் வெற்றிகொண்டு, தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் சார்பிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கும், மறைந்த மலையக தலைவர்களான சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்கும் இடையில் நெருங்கிய உறவுகள் காணப்பட்டது.

அவர்களின் காலத்தில் இருந்த தமிழர்களின் பிரச்சினைகளுக்கும், இந்திய – இலங்கை மீனவ பிரச்சினைகளுக்கும் தற்காலிக தீர்வினை பெற்று கொடுத்தார்கள்.

அதேபோல் எதிர்வரும் காலங்களில் சுமூகமான ஒரு உறவு நீடிக்கும் என தெரிவித்த அமைச்சர் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.