OnePlus Nord 2 அறிமுகமானது; இவ்ளோ கம்மி விலைக்கு வரும்னு யாருமே எதிர்பார்க்கல!

ஹைலைட்ஸ்:

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி அறிமுகமானது
எதிர்பார்த்ததை விட கம்மி விலைக்கு வந்துள்ளது
மொத்தம் 3 ஸ்டோரேஜ் விருப்பங்கள்

எக்கச்சக்கமான வதந்திகள் மற்றும் அதிகாரப்பூர்வ டீசர்களுக்குப் பிறகு, ஒன்பிளஸ் இறுதியாக ஒரு ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வின் மூலம் இந்தியாவில் நோர்ட் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

10 புதிய பிளான்களை Silent-ஆக அறிமுகம் செய்த Airtel; இன்ப அதிர்ச்சியில் பயனர்கள்!

இந்தியாவில் கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட அசல் நோர்ட் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாக வரும் இந்த ரூ.30,000 க்குள் என்கிற விலைக்கு அறிமுகம் ஆகியுள்ளது மற்ற நிறுவனங்களின் ஷாக்கிங் நியூஸ் ஆகும் மற்றும் ஒன்பிளஸ் விரும்பிகளுக்கு குட் நியூஸ் ஆகும்.

என்னென்ன ஸ்டோரேஜ் மாடல்கள், என்னென்ன விலைகள்?

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி
6ஜிபி + 128ஜிபி
ரூ.27,999

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி
8ஜிபி + 128ஜிபி
ரூ.29,999

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி
12ஜிபி + 256ஜிபி
ரூ.34,999

என்னென்ன அம்சங்கள்?

புதிய
ஒன்பிளஸ் நோர்ட் 2
ஸ்மார்ட்போன் ஆனது ஒரு புதிரான ஸ்பெக் ஷீட் உடன் புதிய தோற்றத்தையும் கொண்டு வருகிறது.

ஜூலை.30 வரை ரூ.10,000-க்குள் எந்த Phone-ஐயும் வாங்க வேண்டாம்! ஏனெனில்?

வடிவமைப்பை பொறுத்தவரை, நோர்ட் 2 அதன் வடிவமைப்பை ஒன்பிளஸ் 9 மாடல்களிடமிருந்து கடன் வாங்குகிறது, அதாவது டேப்லெட் வடிவ கேமரா ஹம்பிற்கு மாறாக பெரிய பின்புற கேமரா ஹவுசிங்ஸ், 6.43 இன்ச் அளவிலான டிஸ்பிளேவில் செல்பீ கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் போன்றவற்றை கொண்டுள்ளது.

இதன் டிஸ்பிளே AMOLED பேனலை அடிப்படையாகக் கொண்டது மற்றும் full HD பிளஸ் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது.

இது மீடியா டெக் டைமன்சிட்டி 1200-AI சிப் கொண்டு இயங்குகிறது. இது சமீபத்தில் வெளியான ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5 ஜி மற்றும் ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5 ஜி ஆகியவற்றில் கூட காணப்படுகிறது.

ஆனால் ஒன்பிளஸில் உள்ள சிப்செட் ஆனது டிஸ்பிளே, கேமரா மற்றும் கேமிங் பகுதிகளில் AI மேம்பாடுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய நோர்ட் ஸ்மார்ட்போன்களை போலவே, இதுவும் 3 ரேம் / ஸ்டோரேஜ் விருப்பங்களைத் தேர்வுசெய்கிறது. 6 ஜிபி / 128 ஜிபி மாடல், 8 ஜிபி / 128 ஜிபி மாடல் மற்றும் 12 ஜிபி / 256 ஜிபி.

இதன் கேமரா துறை நல்ல மேம்பாடுகளையும் கண்டுள்ளது: சோனி ஐஎம்எக்ஸ் 766 சென்சார் மற்றும் ஓஐஎஸ் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, ஈஐஎஸ் உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மோனோ லென்ஸ் உள்ளது.

முன்பக்கத்தில் 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மல்டி ஆட்டோஃபோகஸ் (பி.டி.ஏ.எஃப், சி.ஏ.எஃப்), 4 கே வீடியோக்கள், நைட்ஸ்கேப் அல்ட்ரா பயன்முறை, AI மேம்பாடுகள், போர்ட்ரெயிட் பயன்முறை, நைட் போர்ட்ரெயிட் மோட், டூயல் வியூ வீடியோ மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வருகிறது.

இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது வெறும் 30 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து 100 சதவீதத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.

இது ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.3 (topped with ColorOS) கொண்டு இயங்குகிறது. இது இரண்டு ஆண்டு பெரிய மற்றும் மூன்று ஆண்டு பாதுகாப்பு அப்டேட்டைகளை ஆதரிக்கிறது.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் ஸ்பீக்கர்கள், ஹாப்டிக்ஸ் 2.0, இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், 5ஜி (நிச்சயமாக,), என்எப்சி, ப்ளூடூத் வெர்ஷன் 5.2 மற்றும் பலவற்றை கொண்டுள்ளது.

இது கிரே சியரா, ப்ளூ ஹேஸ் மற்றும் க்ரீன் வூட் வண்ணங்களில் வாங்க கிடைக்கும்.

எப்போது முதல் விற்பனை?

அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது இது வாங்க கிடைக்கும். இதன் ஆரம்ப அணுகல் விற்பனையானது ஜூலை 27 ஆம் தேதி நேரலையில் இருக்கும், அதே நேரத்தில் திறந்த விற்பனை ஜூலை 28 ஆம் தேதி தொடங்கும். அமேசான் வலைத்தளத்தை தவிர்த்து இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் பிற முன்னணி ஆஃப்லைன் கடைகள் வழியாகவும் வாங்க கிடைக்கும்

OnePlus Nord 2 விவரங்கள்

முழு அம்சங்கள்

ஃபெர்பார்மன்ஸ்
MediaTek Dimensity 1200

டிஸ்பிளே
6.44 inches (16.36 cm)

சேமிப்பகம்
128 GB

கேமரா
64 MP + 8 MP + 5 MP + 2 MP

பேட்டரி
4115 mAh

price_in_india
29999

ரேம்
8 GB

முழு அம்சங்கள்

மற்ற வேரியன்ட்ஸ்

OnePlus Nord 2
OnePlus Nord 256GB 12GB RAM
OnePlus Nord 2 256GB 8GB RAM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.