அப்போ இந்தியாவை பிரதமர் ஆண்டாங்க..ஆனா இப்போ ராஜா ஆள்கிறார்..பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல்காந்தி

அப்போ இந்தியாவை பிரதமர் ஆண்டாங்க..ஆனா இப்போ ராஜா ஆள்கிறார்..பிரதமரை கடுமையாக விமர்சித்த ராகுல்காந்தி

டேராடூன் : கடந்த ஆட்சிக் காலங்களில் பிரதமர்கள் இந்தியாவை ஆண்ட நிலையில், தற்போது இந்தியாவை மன்னர் ஒருவர் ஆள்வதாகவும், தான் ஒரு முடிவை எடுக்கும் போது மற்றவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என நினைப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்

சட்டசபை பதவி காலம் நிறைவடைந்த உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் கட்சிகள் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

'இதுதான் இந்தியா'.. 50 ஆண்டுகளாக மசூதியை பராமரிக்கும் இந்து குடும்பம்.. மேற்கு வங்கத்தில் நெகிழ்ச்சி‘இதுதான் இந்தியா’.. 50 ஆண்டுகளாக மசூதியை பராமரிக்கும் இந்து குடும்பம்.. மேற்கு வங்கத்தில் நெகிழ்ச்சி

பலம் காட்டும் பாஜக

பலம் காட்டும் பாஜக

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறியிருப்பதாக ஏபிபிடி ஓட்டஸ் நிறுவனம் கூறியிருந்தது. அதன்படி உத்தரகாண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பாஜகதான் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக ஏபிபி – சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. இங்கு 39.8% வாக்குகள் அதாவது 33-39 இடங்களை வென்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டிருந்தது.

தேர்தலில் இழுபறி

தேர்தலில் இழுபறி

ஆளும் பாஜக அரசு இதுவரை மூன்று முறை முதலமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியில் ஸ்திரத்தன்மை அற்ற நிலை நீடிக்கிறது. அதேநேரம் இழந்த ஆட்சியைப் பிடிப்பதற்காக காங்கிரஸ் கட்சியும் பல்வேறு வியூகங்களை வகுத்து அதனை செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களில் இருப்பது போலவே உத்தரகாண்டிலும் பாஜக அமைச்சர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில் ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி உத்தரகாண்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

ராஜா ஆள்கிறார்

ராஜா ஆள்கிறார்

உத்தரகாண்ட் மாநிலம் கிச்சாவில் ‘உத்தரகாண்டி கிசான் ஸ்வாபிமான் சம்வாத்’ என்ற தலைப்பில் நடந்த பேரணியில் உரையாற்றிய ராகுல்காந்தி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் பொங்கி வரும் போது பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளை ஓராண்டு காலமாக சாலைகளில் விட்டுச் சென்றதாக குற்றம் சாட்டினார். மேலும், விவசாயிகள், தொழிலாளர்கள் அல்லது ஏழைகளுக்கு தனது கட்சி கதவுகளை ஒருபோதும் மூடாது என்றும் அவர்களுடன் கூட்டணியை விரும்புவதாகவும் தெரிவித்தார். ஒரு பிரதமர் அனைவருக்கும் உழைக்கவில்லை என்றால், அவர் பிரதமராக முடியாது எனவும், அந்த அடையாளத்தின்படி, நரேந்திர மோடி ஒரு பிரதமர் அல்ல என்றும், இந்தியாவுக்கு இன்று பிரதமர் இல்லை, தான் ஒரு முடிவை எடுக்கும்போது மற்றவர்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நம்பும் ஒரு ராஜா ஆட்சியில் உள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

இரு இந்தியா உள்ளது

இரு இந்தியா உள்ளது

மோடி அரசாங்கம் விவசாயிகளை நடத்தும் விதத்தில் தனது கட்சி ஒருபோதும் விவசாயிகளை நடத்தாது என்றும், விவசாயிகள், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் எனப் பேசிய ராகுல்காந்தி, மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை பாறை போன்ற திடமான உறுதியுடன் விவசாயிகள் எதிர்த்ததாகவும் கூறினார். முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, இரண்டு இந்தியா உள்ளது, பணக்காரர்களுக்கு ஒன்று மற்றும் ஏழைகளுக்கு ஒன்று, நாட்டில் சுமார் 100 பேர் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குழு, நாட்டின் மக்கள்தொகையில் 40 சதவிகிதம் சொத்துக்களைக் கொண்டுள்ளது. இதுபோன்ற வருமான ஏற்றத்தாழ்வு வேறு எங்கும் காணப்படவில்லை என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Congress leader Rahul Gandhi has slammed Prime Minister Narendra Modi for saying that India is now ruled by a king and that others should remain silent when he makes a decision, as prime ministers ruled India during previous regimes.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.