சமூக ஊடகங்கள் நமது அன்றாட வாழ்வில் இன்றியமையாத அங்கமாகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்வது முதல் நம்மை அப்டேட்டாக வைத்திருக்க இந்த சமூக ஊடகங்கள் உதவுகின்றன. அவை இல்லாத இந்த உலகம், இப்போதைய நிலையில் சாத்தியமா? அந்த உலகம் எப்படி இருக்கும்? என்பது கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.
ALSO READ | மும்பையில் முடங்கிய ஜியோ நெட்வொர்க்..! வாடிக்கையாளர்கள் அவதி
ஆனால், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வருவதை அண்மைக்காலமாக பார்க்க முடிகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமான செயலியாக இருப்பது இன்ஸ்டாகிராம். ரீல்ஸை உருவாக்கி நண்பர்களுக்கு பகிர்வது முதல் வீடியோக்கள் பார்ப்பது, மெசேஜ் அனுப்புவதற்கு இந்த செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ALSO READ | TATA-வின் அனைத்து கார்களிலும் இந்த மாதம் பம்பர் தள்ளுபடிகள், அசத்தல் சலுகைகள்
சிறந்த பொழுதுபோக்கு செயலியாக இருப்பதால் பல மணிநேரம் அதில் செலவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் இன்ஸ்டாவை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. இத்தகைய அடிமைதனத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு, நாள்தோறும் எவ்வளவு நேரம் இன்ஸ்டாகிராமில் செலவிடுகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஒரு அம்சம் வழியாகவே, நீங்கள் எவ்வளவு நேரம் அந்த செயலியை பயன்படுத்துகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.