கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் (Vikram) நடிக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’ படம் தமிழில் உருவாகும் ஸ்பை த்ரில்லர் திரைப்படமாகும். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, பிரித்விராஜ், பார்த்திபன், சிம்ரன், ராதிகா, திவ்யதர்சினி, சிராவந்தி சாய்நாத், மாயா எஸ். கிருட்டிணன், சதீஸ் கிருஷ்ணன், முன்னா, வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜோமோன் டி.ஜான், சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன், மனோஜ் பரமஹம்சா மற்றும் எஸ்ஆர் கதிர் ஆகியோர் ஒளிப்பதிவையும், பிரவீண் ஆண்டனி படத்தொகுப்பையும் செய்துள்ளார்.
ALSO READ | விக்ரமுடன் கூட்டணி சேர்ந்த இயக்குனர் ரஞ்சித்! அரசியல் படமா?
2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் நிதி நெருக்கடி காரணமாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இப்படத்தில் ஜான் என்ற ரகசிய ஏஜென்டாக விக்ரம் நடிக்கிறார். ஏழு நாடுகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நீண்ட நாடளுக்கு முன்னரே இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நினைவடைந்துவிட்ட நிலையில் படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடையவில்லை.
மேலும் நீண்ட நாட்களாக படம் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது சில முக்கியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் காட்சிகள் கிட்டத்தட்ட 4.5 மணி நேரம் கால அளவு கொண்டிருப்பதால் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விக்ரம் (Vikram) இப்படத்தில் தனக்கான காட்சிகளுக்கு ஓரளவு டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிட்டதாகவும், இன்னும் சில காட்சிகளுக்கே டப்பிங் பேச வேண்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.
ALSO READ | ஒரே வருடத்தில் வெளியாகபோகும் விக்ரமின் 4 படங்கள்!