ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட்? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மாஸ்டர் படத்தின் வெற்றியை அடுத்து விஜய் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பீஸ்ட் (Beast). கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரியதாக இருந்தது.  நெல்சனின் டாக்டர் படம் வருவதற்கு முன்பே பீஸ்ட் படத்துக்கான அறிவிப்பு வெளியானது.  டாக்டர் படம் வெளியான பின்பு இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகமானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியான பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  மேலும் டாக்டர் படத்தில் நடித்த பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். 

ALSO READ | ஏப்ரலில் வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் பிரம்மாண்ட படங்கள்!

இப்படத்தில் கூடுதல் சிறப்பம்சமாக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் (Selvaragavan) நடிக்கிறார்.  இதுவரையில் பீஸ்ட் படத்தின் கதை அம்சத்தை பற்றி அதிகாரபூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.  இருப்பினும் இப்படத்தில் விஜய் ஒரு ராணுவ உளவாளியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.  புத்தாண்டு மற்றும் பொங்கல் தினத்தன்று இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் புதிதாக ஒரு போஸ்டர் மட்டுமே வெளியானது. ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்று மட்டும் அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளிவந்து இருந்தது.

இந்நிலையில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் தேதி அறிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.  ஏப்ரல் மாதம் வெளியாகும் எந்த படத்திற்கும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி வெளியாகாமல் உள்ளது.  தற்போது பீஸ்ட் படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வந்துள்ளது. தற்போது வரை ஏப்ரல் மாதத்தில் எந்த ஒரு பெரிய படங்களும் வெளியாகும் என்று அறிவிப்பு வரவில்லை.  இருப்பினும் KGF2 படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

ALSO READ | கடந்த 20 வருடத்தில் பார்க்காத கதை! தளபதி 66 குறித்து கூறிய விஜய்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.