ஓசூர் அருகே தந்தத்திற்காக யானை சுட்டுக் கொலை: யானையை கொன்றது தொடர்பாக 3 பேரை கைது செய்தது வனத்துறை

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே 2 நாட்களுக்கு முன்பு இறந்து கிடந்த யானை தந்தத்திற்காக சுடப்பட்டிருப்பது உடற்கூராய்வில் தெரிய வந்தது. ஓசூர், அஞ்செட்டி அருகே கடந்த 2 தினங்களுக்கு முன்பாக யானை ஒன்று இறந்து கிடப்பதாக வன காப்பாளர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று சென்ற மாவட்ட வன அலுவலர் மற்றும் மருத்துவ குழுவினர் அந்த பகுதியிலேயே அந்த யானையை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது யானை சுடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுடப்பட்ட யானை ஆண் யானை, யானையின் இரண்டு தந்தங்களும் யானையிலேயே இருந்தது. இருந்த போதிலும் அந்த யானையை பிரேத பரிசோதனை மேற்கொண்டு அந்த பகுதியிலேயே புதைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி அப்பகுதியில் ஈடுபடுவது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. தொடர்ந்து அவர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.