டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியாற்றிய 241 இந்திய தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ம.பி.யைச் சேர்ந்த விஜய் பாஹீல் எம்.பி.யின் கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். சவுதி அரேபியா, கத்தார், யு.ஏ.இ., குவைத், சூடான், மலேசியா, சிங்கப்பூரிலும் இந்திய தொழிலாளர்கள் விபத்துகளில் பலியாகியுள்ளனர். இதேபோல், பஹ்ரைன், ஓமன், அஜர்பைஜான், போர்ச்சுகல், ஈராக், மொரிஷியஸ், ருமேனியா நாடுகளிலும் இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக கத்தார் நாட்டில் 81 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.