கான்ஸ்டபிளை கொல்ல பெண் இன்ஸ்பெக்டர் ஆர்டர்?; உத்தரவை தெறிக்கவிட்டது மனித உரிமை ஆணையம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வெண்கரும்பூரை சேர்ந்தவர் ராஜசேகர் (35). காவல் துறையில் திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார்.

நாகர்கோயில் ஆலம்பாறை பகுதியில் ஜாலியாக செல்பீக்கு போஸ் கொடுக்கும் கருங்குரங்கு!

கடந்த 1.6.2019 அன்று தொழுதூர் அருகே பகுதி கல்குவாரியில் ராஜசேகர் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக ஜெலட்டின் மற்றும் டெட்டர்னேட்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

நன்றி மறந்த உதயநிதி ஸ்டாலின்; முஸ்லிம்கள் போர்க்கொடி!

இதுதொடர்பாக ராஜசேகர் அளித்த தகவலின்படி ராமநத்தம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தனிப்பிரிவு ஏட்டு தண்டபாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தனிப்பிரிவு ஏட்டு தண்டபாணி ஆகியோர் திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவலர் ராஜசேகரை மிரட்டியதோடு, அவரை லாரி ஏற்றி கொலை செய்யுமாறு கல்குவாரி பணியாளர்களுக்கு உத்தரவிட்டதாக புகார் எழுந்தது.

வகுப்பறையில் நுழைய தடை; மாணவ, மாணவிகள் அதிர்ச்சி!

இதுதொடர்பாக அன்றைய நாளிதழ்களிலும் செய்தி வெளியானது. இதனை ஆதாரமாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையர் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் செம ப்ளான்; திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்!

இருவரும் சேர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்திய காரணத்தால் காவலர் ராஜசேகருக்கு 4 வாரத்திற்குள் தமிழக அரசு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அதை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஊதியத்தில் ரூ.75 ஆயிரம், ஏட்டு தண்டபாணி ஊதியத்தில் ரூ.25 ஆயிரத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

தற்போது இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ஏட்டு தண்டபாணி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.