சமூக நீதி கூட்டமைப்பை விரிவுபடுத்தும் ஸ்டாலின்: தொடரும் அழைப்பு!

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு
மு.க.ஸ்டாலின்
37 கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “தனித்தன்மை மிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆனதுமான நமது ஒன்றியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும். இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்.

சமூகநீதித் தத்துவத்தின் மீதான தனது உறுதிப்பாட்டைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒவ்வொரு முறையும் வலிமையாகப் போராடி வந்துள்ளது என்பது, அண்மையில், நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் வழியாக 27% இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்ததில் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டப்பட்டுள்ளது.

சசிகலா யாருடைய ஸ்லீப்பர் செல்? பாஜக போட்ட பக்கா பிளான்!

எனினும் சமூகநீதியை உறுதிசெய்ய இடஒதுக்கீடு மட்டுமே போதுமானதல்ல. சமூகத்தின் பொதுநீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு நூற்றாண்டுகளாய் எதிர்கொண்ட அடக்குமுறையை உடைத்தெறிய வேண்டுமானால் அத்தகையோருக்கு ஒவ்வொரு படியிலும் சில சிறப்புரிமைகள் தரப்பட வேண்டும். சாதிப் பாகுபாட்டுடன் பாலினப் பாகுபாட்டை ஒழிக்கவும்; மாற்றுத்திறனாளிகள் பொதுநீரோட்டத்தில் இணைந்து போட்டியிடக் கூடிய வகையிலும் நாம் முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர், “தங்கள் அமைப்பில் இருந்து இந்த அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர்/நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கோருகிறேன். ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான பொருள்பொதிந்த சமூகநீதி சென்றடைய நாம் ஒன்றுபட்டு இருந்தால்தான் முடியும். சமூகநீதியில் பல பத்தாண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்துக்குப் பிற்போக்குச் சக்திகள் சவால் விடும் இந்த இடர்மிகு காலத்தில், ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோக்க வேண்டியது மிக இன்றியமையாதது ஆகும். இம்முன்னெடுப்பில், எங்களுடன் நீங்களும் இணைய உங்களை வரவேற்க நான் எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இறையன்பு வெளியிட்ட உத்தரவு: புதிய திட்டம் தொடக்கம்!

ஸ்டாலினின் இந்த முன்னெடுப்பு தேசிய அளவில் கவனம் பெற்றது. 37 கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் தற்போது மேலும் சில அமைப்புகளுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, நேற்று திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில் , “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய 38 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதியன்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தாா். அதனைத் தொடா்ந்து,

திராவிடா் கழகத் தலைவா்
கி.வீரமணி
,

அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரய்யா,

ஏஐஓபிசி கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் கோ. கருணாநிதி,

பிஏஎம்சிஇஎப் அமைப்பைச் சோந்த பி.டி. போா்கா்,

பிஏஜிஏஏஎம், அமைப்பின் நிறுவனா் தஜிந்திா் சிங் ஜல்லி,

சாமாஜிக் சேத்னா அமைப்பின் நிறுவனா் வீரேந்திர சிங் யாதவ்,

லீட் இந்தியா அமைப்பின் நிறுவனா் ஹரி எப்பனப்பள்ளி உள்ளிட்டோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினாா்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.