விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. விக்னேஷ் சிவன் எழுத்தில் வந்த அம்மா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அந்த வேலைகள் முடிந்ததும், நயன்தாராவுடன் லாங்டே டூர் செல்ல திட்டமிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இதற்காக காத்திருப்பதாகவும், விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்து, இதனை கூறியுள்ள விக்னேஷ் சிவன், நயன்தாராவுடனான பயண அனுபவத்தை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.
சூட்டிங் இல்லாதபோது வெளிநாடு செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் இருவரும், புத்தாண்டின்போது துபாய் சென்றிருந்தனர். ஏற்கனவே கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ள அவர்கள், தங்கள் டிராவல் டைரியில் இருக்கும் புதிய நாட்டிற்கு இந்தமுறை பயணம் மேற்கொள்ள உள்ளனர்.