பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய மற்றொரு பிரபலம்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘பாரதி கண்ணம்மா’.  இதில் நாயகி கண்ணம்மா கருப்பாக இருப்பதால் அனைவரும் வெறுத்து ஒதுக்கும் நிலையில், பிரபல டாக்டராக பணிபுரியும் நாயகன் பாரதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறான்.  பலரின் எதிர்ப்பை மீறியும் பாரதி, கண்ணம்மா மீது அன்பு செலுத்தி வருகிறான்.

ALSO READ | Bigg Boss 15 Finale: டைட்டில் வின்னர் தேஜஸ்வி பிரகாஷிற்கு கிடைத்த பணம் இவ்வளவா

நன்றாக செல்லும் அவர்களது குடும்ப வாழ்க்கையில் பாரதியை ஒருதலையாக காதலிக்கும் பாரதியின் தோழி வெண்பா இவர்களுக்குள் குறுக்கிட்டு இருவரையும் பிரித்துவிடுகிறாள்.  இதனால் பாரதி, கண்ணம்மா மீது சந்தேகப்பட கண்ணம்மா ஒரு பையை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.  கர்ப்பிணியான இவர் இப்படி வெகு தூரம் நடந்து செல்வதை நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் மீ்ம்ஸ்களாக பதிவிட்டனர்.  இந்த மீம்ஸ்களை (Memes) பார்த்த பின்னர் நாடகத்தினை பார்க்காத பலரும் இந்த நாடகத்தை பார்க்க தொடங்கினர்.

kannama

பின்னர் கண்ணம்மாவிற்கு ஒரு வழியாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துவிட ஒரு குழந்தை கண்ணம்மாவிடமும், மற்றொரு குழந்தை பாரதியிடமும் வளர்கிறது. கண்ணம்மாவின் மீது உள்ள சந்தேகத்தினால் பாரதி இது தன்னுடைய குழந்தை தான் என்பதை ஏற்க மறுக்கிறான்.  பாரதியின் குழந்தைதான் இவர்கள் என்பதை நிரூபிக்க DNA டெஸ்ட் எடுக்க  கண்ணம்மா பாரதியிடம் கூற, அதை பாரதி நிராகரிக்கிறான்.  மேலும் பாரதி, கண்ணம்மாவை புரிந்து கொள்வானா? DNA டெஸ்ட் எடுத்து இவர்கள் தனது குழந்தைகள் தான் என்பதை ஏற்றுக் கொள்வானா? என்று பலவித பரபரப்புடன் இந்த நாடகம் சென்று கொண்டிருக்கிறது.

kannama

இந்நிலையில் இந்த நாடகத்தில் இருந்து முக்கியமான கதாபாத்திரங்கள் விலகிக் கொண்டிருக்கின்றனர்.  முதலில் பாரதியின் தம்பியாக நடித்த அகிலன் இந்த நாடகத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது இவரது கதாபாத்திரத்தில் சுகேஷ் ராஜேந்திரன் என்பவர் நடித்து வருகிறார்.  இதனைத் தொடர்ந்து கண்ணம்மாவாக நடித்த ரோஷினி இந்த நாடகத்தில் இருந்து விலகிவிட, தற்போது டிக்டாக் மூலம் பிரபலமான வினுஷா கண்ணம்மாவாக நடிக்கிறார்.  தற்போது இதில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி நாடகத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

kannama

பரபரப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நாடகத்தில் தற்போதுதான் இரண்டு கதாபாத்திரங்களை replacement செய்த நிலையில் மூன்றாவதாக மற்றொரு கதாபாத்திரத்திற்கு replacement செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து இந்த நாடகத்தின் இயக்குனர் பிரவீன் பென்னெர்ட் தனது இன்ஸ்டாகிராம் (instagram) ஸ்டோரியில் “Replacement..அய்யோ அய்யோ, என்னத்த சொல்றது..எத்தன ஸ்ஸப்பா..”என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ | சிங்கர் சில்க் ஸ்மிதாவையும் ரசிக்கும் ரசிகர்கள்..! அரிய வீடியோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.