புதிய விதிமுறைக்கு எதிராக சச்சின் போர்க்குரல்..!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி இன்று 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. கிரிக்கெட் வரலாற்றில் ஆயிரம் ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்திருக்கிறது. இது குறித்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சச்சின், இப்போது இருக்கும் கிரிக்கெட் விதிமுறைகள் குறித்து வெளிப்படையாக பேசினார்.

ALSO READ | ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா!

ஒருநாள் போட்டியில் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவது போட்டியின் சமநிலைக்கு உகந்தது அல்ல என தெரிவித்துள்ள அவர், பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கும் வகையில் விதிமுறைகள் கொண்டுவரக்கூடாது எனக் கூறியுள்ளார். இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படும்போது, பந்து வீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாது என சச்சின் கூறியுள்ளார். இதனால், இனிவரும் காலங்களில் கிரிக்கெட் போட்டிகளில் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சை பார்ப்பது என்பது அபூர்வமானதாக மாறிவிடும் என அவர் தெரிவித்துள்ளார். 

ALSO READ | 5வது முறை கோப்பையை வெல்லுமா U19 இந்தியா? இன்று பைனல்!

பந்துவீச்சாளர்களின் டெக்னிக்குளில் ஒன்றான ரிவர்ஸ் ஸ்விங், பந்து தேய்மானம் அடையும்போது மட்டுமே அவர்களால் சிறப்பாக செய்ய முடியும். 90களில் ரிவர்ஸ் ஸ்விங் அதிகம் இருந்தது. அத்தகைய பந்துகளை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என சச்சின் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் புதிதாக கொண்டுவரப்படும் ரூல்ஸ்கள் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இருதரப்புக்கும் சமமாக இருக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்த ரூல்ஸூக்கு எதிராக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தரும் தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்திருந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.