பெங்களூரு போறேன் செல்லம்..மனைவியை ஏமாற்றி காதலியுடன் புனோவில் உல்லாசம்.. ஜிபிஎஸ் மூலம் லபக்கிய மனைவி
காந்திநகர் : பெங்களூருவுக்கு முக்கிய பணியின் காரணமாக செல்வதாக கூறிவிட்டு புனேவில் ஓட்டல் அறையில் காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை ஜிபிஎஸ் டிரக்கர் மூலம் மனைவி கண்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் காலத்தில் எல்லாமே கையில் வந்துவிட்ட பிறகு நம்மைச் சுற்றியுள்ளவர்கள் விலகி போவதும் ஒரு சாபம் தான். அந்த அளவுக்கு செல்போன் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் நம்மைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது.
குறிப்பாக கணவன், மனைவியிடையேயான தொடர்புகள் முற்றிலும் அற்றுப்போய், இருவரும் ஒரே வீட்டிலேயே இருந்தாலும் இரு துருவங்களாய் வாழ்வதும் அதிகரித்துள்ளது. இதெற்கெல்லாம் மேலாக முறையற்ற உறவுகளும் அதிகரித்து வருகிறது.

முறையற்ற உறவு விபரீதம்
மனைவிக்கு தெரியாமல் கணவனும், கணவனுக்கு தெரியாமல் மனைவியும் முறையற்ற உறவுகளுடன் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். ஆனால் அவ்வாறு இருக்கும் மனைவியையோ அல்லது கணவனையோ, துணையார்கள் கையும் களவுமாக பிடித்து அடித்துத் துவைக்கும் சம்பவங்களும், அவை சமூக வலைதளங்களிலும், செய்திகளாகவும் மக்களிடையே பரவி வருகின்றன. இப்படி ஒரு குஜராத் தொழிலதிபதிபர் ஒருவர் மனைவியை ஏமாற்றுவதாக எண்ணி, வசமாய் சிக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

குஜராத் தொழிலதிபர்
குஜராத் மாநிலம் காந்தி நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் டெக்ஸ்டைல் அழகு சாதன பொருட்கள் துறையில் மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது செயல்பாடுகள் மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியை நிறுவனத்தின் இயக்குனராக நியமித்த அந்த தொழிலதிபர் பணி நிமித்தமாக பல்வேறு முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருப்பதால் தான் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டும் எனக்கூறி சமாளித்துள்ளார். மேலும் வாரத்தின் பெரும்பாலான நாட்களில் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவரின் செயல்பாடுகள் மீது மனைவிக்கு சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.

ஜிபிஎஸ் டிராக்கர்
செல்போன் லேப்டாப் ஆகியவற்றை பாஸ்வேர்டு மூலம் லாக் செய்து வைத்த தொழில் அதிபர் அவற்றை தொடக் கூடாது எனவும் கூறியுள்ளார். இதையடுத்து அவரை கண்காணிக்க முடிவு செய்த மனைவி அவரது காரில் ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தி அதனை தனது செல்போன் மூலம் கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கிய அலுவல் கூட்டம் தொடர்பாக பெங்களூர் செல்வதாக கூறி அந்த தொழிலதிபர் சொல்லியுள்ளார். இதையடுத்து அவரது கார் புறப்பட்டதும் அவரது மனைவி தொடர்ந்து ஜிபிஎஸ் மூலம் அவரது கார் செல்லும் பாதையை கண்காணித்து வந்துள்ளார்.

வசமாய் சிக்கினார்
இரண்டு நாட்கள் பயணத்திற்குப் பிறகு அவரது கார் பெங்களூர் செல்லாமல் பூனை இதில் இருப்பது தெரியவந்தது மேலும் ஹோட்டல் அறையில் தொழிலதிபர் கார் நிறுத்தப்பட்டு இருப்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. ஓட்டல் அறையில் தனது காதலியுடன் உல்லாசமாக இருக்க நினைத்த தொழிலதிபர் அவரது ஆதார் அட்டையும் தனது மனைவியின் ஆதார் அட்டையை வைத்து அறை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து தொழிலதிபரின் மனைவி ஹோட்டல் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது தொழிலதிபர் அவரது மனைவியுடன் தங்கி இருப்பதாக கூறினார்.

போலீசில் புகார்
மேலும் ஓட்டல் ஊழியர்கள் அவரது ஆதார் எண்ணையும் கூறினார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னை ஏமாற்றிய கணவர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மனைவியிடம் வசமாய் சிக்கிக் அதை உணர்ந்த தொழிலதிபர் காதலியுடன் தலைமறைவான நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை கண்காணிக்க ஜிபிஎஸ் உதவியுடன் காவல்துறையில் கணவன் மனைவியை சிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.