பேருந்து பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனிமே நல்ல உணவு சாப்பிடலாம்!

சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கும் தினமும் நூற்றுக்கணக்கான அரசு விரைவுப் பேருந்துகளும், தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

பல மணிநேரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பசியாறவும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் வசதியாக நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள உணவகங்களில் (
மோட்டல்கள்
) சில நிமிடங்கள் பேருந்துகள் நிறுத்தப்படுவது வழக்கம்

இவ்வாறு
அரசு விரைவுப் பேருந்துகள்
உணவு இடைவேளைக்காக நிறுத்தப்படும் உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், உணவுப் பொருட்கள் அதிக வில விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மோட்டல்களில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.. இந்த சோதனையின் முடிவில் விக்கிரவாண்டியில் உள்ள 5 மோட்டல்களில் அரசுப் பேருந்துகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

.
முடிவுக்கு வரும் ஆன்லைன் விசாரணை: பிப்ரவரி 7 முதல் இனி இப்படி தான்!

சென்னையில் இருந்து திருச்சி, சேலம் உள்ளிட்ட மார்க்கமாக செல்லும் விரைவுப் பேருந்துகள் குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பேருநதுகள் நிற்க வேண்டிய உணவகங்கள் குறித்த பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘சென்னையிலிருந்து நெல்லை, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோவை செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவன் உணவகத்திலும், திண்டுக்கல், காரைக்குடி, சேலம் செல்லும் பேருந்துகள் வசந்த பவன் உணவகத்திலும் நிறுத்த வேண்டும்.

யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி? – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

இதேபோல் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் உளுந்தூர்பேட்டை- விழுப்புரம் மார்க்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பலாஜி ஆரியாஸ் உணவகத்தில் நிறுத்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நெடுஞ்சாலைகளில் மொத்தம் 18 உணவகங்களில் பேருந்துகளை நிறுத்த அரசு அனுமதித்துள்ளது. குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி பேருந்து இயக்கிய விவரம், உணவகத்தில் நின்ற விவரம் உள்ளிட்டவற்றை பணிமனை வாரியாக வாட்ஸ் அப் செயலி மூலம் அனைத்து கிளை மேலாளர்களும் தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டும்’ என்று அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.