முகேஷ் அம்பானி வாங்கியிருக்கும் சொகுசு கார்..! விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் பெரும் செல்வ வளத்துக்கு சொந்தக்காரரான முகேஷ் அம்பானியிடம் ஏராளமான சொகுசு கார்கள் உள்ளன. புதிய மற்றும் விலை உயர்ந்த கார்களின் மீது அபரிவிதமான மோகம் கொண்டிருக்கும் அவர், இப்போது விலையுயர்ந்த எஸ்.யூ.வி கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்தக் கார் எப்போது வாங்கப்பட்டது என்ற தகவல் இல்லையென்றாலும், அவரிடம் இருக்கும் காரின் புகைப்படம் இப்போது லீக்காகியுள்ளது. முகேஷ் அம்பானியின் சொகுசு கார்கள் நிற்கும் இடத்தில் காடிலாக்கின் சொகுசு காரும் நின்று கொண்டிருக்கிறது. 

ALSO READ | மும்பையில் முடங்கிய ஜியோ நெட்வொர்க்..! வாடிக்கையாளர்கள் அவதி

காடிலாக் சொகுசு கார்

அம்பானி வாங்கியிருக்கும் புதிய சொகுசு காரைப் பொறுத்தவரை இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் காடிலாக் பிராண்ட் கார்களில் எஸ்கலேட் வெள்ளி நிறக் காரை அவர் வாங்கியுள்ளார். தனிப்பட்ட முறையில் அந்தக் காரை அம்பானி இறக்குமதி செய்துள்ளார். கம்பீரமான வடிவமைப்பு, நீளம் உள்ளிட்டவை காண்போரின் கண்களை பறிக்கிறது. இந்தக் காரில் இடம்பெற்றிருக்கும் பெரிய கிரில் முதல் எல்இடி ஹெட்லேம்ப்கள் வரை அனைத்தும் ஆடம்பரமானவை.

அமெரிக்க அதிபர்

அமெரிக்காவில் இருக்கும் பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் இந்தக் கார்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அமெரிக்க அதிபரிடம் கூட காடிலாக் எஸ்கலேடில் கார் உள்ளது. இந்தக் காரை அம்பானி முதன்முதலாக இந்தியாவில் வாங்கியவர் இல்லை. அவருக்கு முன்பே பலர் இறக்குமதி செய்திருக்கிறார்கள். எஸ்கலேடில் 420 பிஎச்பி மற்றும் 624 என்எம் பீக் டார்க்கை உருவாக்கும் 6.2-லிட்டர் வி8 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. விலை ரூ.13.14 கோடி.

ALSO READ | TATA-வின் அனைத்து கார்களிலும் இந்த மாதம் பம்பர் தள்ளுபடிகள், அசத்தல் சலுகைகள்

அம்பானியிடம் இருக்கும் கார்கள்

அவரிடம் ஏற்கனவே லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110, லெக்ஸஸ் எல்எக்ஸ் 570, பென்ட்லி பென்டேகா டபிள்யூ12, பென்ட்லி பென்டேகா வி8, ரோல்ஸ் ராயல் குல்லினன், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், லம்போர்கினி யூரஸ், டிஸ்கவர் ஜி, எல்எக்ஸ், எல்எக்ஸ், எல்எக்ஸ், எல்எக்ஸ் உள்ளிட்ட பல கார்கள் இருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.