மும்பையில் முடங்கிய ஜியோ நெட்வொர்க்..! வாடிக்கையாளர்கள் அவதி

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, இந்தியாவின் பங்குவர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் மும்பை டெலிகாம் வட்டாரத்தில் திடீரென முடங்கியுள்ளது. இதனால், அவதியடைந்துள்ள வாடிக்கையாளர்கள் பலர், ரிலையன்ஸ் ஜியோ எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.

ALSO READ | JIO-AIRTEL-VI சூப்பர் திட்டம்; குறைந்த விலையில் அதிக நன்மைகளைப் பெறலாம்

டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பலரும், ஜியோ நெட்வொர்க்கில் இருந்து புதிய அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை. பிற எண்களில் இருந்தும் ஜியோவுக்கு அழைக்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர். ஜியோ டூ ஜியோவுக்கு கூட  அழைப்புகள் செல்லவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சனையானது மும்பையின் அனைத்து புறநகர் பகுதிகளிலும் இருப்பதாக கூறப்படுகிறது. கல்யாண், டோம்பிவிலி மற்றும் தானே பகுதிகளில் இருக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் முடக்கத்தை எதிர் கொண்டுள்ளனர்.

இந்த சிக்னல் பிரச்சனை குறித்து ஜியோ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மும்பையில் மட்டும் இந்தப் பிரச்சனை இருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறதா? என்பது விரைவில் தெரியவரும்.

மாற்று என்ன?

ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த சிக்னல் செயலிழப்பு பிரச்சனை தீரும் வரை மாற்று எண்களை பயன்படுத்துவது சிறந்தது. அது வாய்ப்பில்லை என்றால், வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்ளுங்கள். நெட்வொர்க் பிரச்சனை தீரும் வரை இது மட்டுமே கையில் இருக்ககூடிய மாற்று வழி.

ALSO READ | TATA-வின் அனைத்து கார்களிலும் இந்த மாதம் பம்பர் தள்ளுபடிகள், அசத்தல் சலுகைகள்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.