விஜய்யின் அரசியல் சந்திப்பு : திட்டம் என்ன!

பொதுவாகவே நடிகர்களுக்கு அரசியல் ஆசை வருவது இயல்புதான்.  தமிழகத்தில் நடிகர்களாக இருந்து மாநிலத்தையே ஆட்சி செய்துள்ளனர்.  முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரும் திரைப்படத்தில் இருந்து வந்தவர்களே.  அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

ALSO READ | விஜய்யை சந்தித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: புகைப்படங்கள்!

தனது திரைப்படங்கள், ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகளில் அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றாலும், நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் விஜய்.  நீட் பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்ட அனிதா வீட்டிற்கு சென்றது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் அளித்தது என விஜய் (Actor Vijay) தனது அரசியல் நிலைப்பாட்டை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளார்.  2014 ஆம் ஆண்டு வெளியான தலைவா படத்தில் இருந்து நடிகர் விஜய்க்கு பெரும் பிரச்சினைகள் ஆரம்பித்தது. 

தலைவா படத்திற்கு பிறகு விஜய் படம் எப்போது வெளியானாலும் அரசியல் சலசலப்பு இன்றி இருக்காது.   சமீபத்தில் சர்கார் (Sarkar) படம் வெளியானது போது கூட தமிழக அமைச்சர்கள் ரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தினர்.  மேலும் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறார்.  சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட இடங்களையும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர் வென்றுள்ளனர்.  தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகின்றனர். 

vijay

2026 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் முழுவதுமாக அரசியலில் இறங்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.  அந்தவகையில் தற்போது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விஜய்யை நேரில் வந்து சந்தித்து பேசியுள்ளார்.  புதுச்சேரியில் ரங்கசாமியின் கட்சி பிஜேபியுடன் கூட்டணி வைத்துள்ளது.  தற்போது இவர் விஜய்யை வந்து சந்திப்பது பிஜேபிக்கு ஆதரவு கரம் திரட்டவா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இதுவரை விஜய் பிஜேபிக்கு எதிரான கருத்துக்களையே முன் வைப்பது போல் ஒரு பிம்பம் உள்ளது.  கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் வாக்கு செலுத்த சைக்கிளின் பயணம் செய்திருந்தார். இது அந்த சமயத்தில் மிகப் பெரிய பேச்சு பொருளானது.  தற்போது புதுச்சேரி முதல்வருடன் சந்திப்பும் தமிழகத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ALSO READ | ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட்? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.