ஹாலிவுட் படங்களுக்கு இணையானது வலிமை! போனி கபூரின் நண்பர் ரிவியூ!

ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பான வலிமை படத்தை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூரின் நண்பர் படத்தை குறித்து பெருமையாக பேசியுள்ளார்.  எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’ (Valimai).  தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில்  ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, குர்பானி நீதிபதி, யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ALSO READ | VALIMAI: வலிமை ரிலீஸ் தள்ளிப்போனதே! வைரலாகும் ‘மனசு வலிக்குது’ போஸ்டர்!!

இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் யாவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்திலுள்ள சில வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் போன்றவைகளை நீக்க தணிக்கை குழு பரிந்துரைத்ததோடு இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கி இருக்கிறது.  படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  கொரோனா பரவல் காரணமாக படத்தை அறிவித்த தேதியில் வெளியிடாமல் படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளிவைத்த நிலையில் இம்மாதம் 24ம் தேதி திரையரங்குகளில்  வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த தயாரிப்பாளரான போனி கபூரின் நண்பர் ராஜேஷ் வஸானி தெரிவித்துள்ள கருத்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது.  “ஹாலிவுட்டில் மிகப்பெரியளவில் வெற்றிபெற்ற FAST & FURIOUS மற்றும் MISSION IMPOSSIBLE போன்ற படங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு இந்திய படம் உருவாகியுள்ளது என்றால் அது ‘வலிமை’ படம் தான்.  திரையரங்கில் தெறிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.  சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் தொடக்கம் என்றால் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் தான் முடிவு” என்று கூறியுள்ளார்.

 

இந்த பதிவு அஜித் ரசிகர்களை (Ajith Fans) உற்சாகம் அடைய செய்துள்ளது.  ஏற்கனவே வெளியான ட்ரைலர் மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டி இருந்தது.  தற்போது இவரின் இந்த பதிவு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.  படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு படத்தில் இருந்து சில கிளிப்ஸ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | Valimai Release date: பிப்ரவரி 24 வலிமை ரிலீஸ்… கன்ஃபார்ம் செய்தி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.