பட்ஜெட்டில் சொன்ன 400 வந்தே பாரத் அதிவேக ரயில்… குறுகிய காலத்தில் இலக்கை எட்ட முடியுமா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என அறிவித்தார்.

2019 இல் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, டெல்லியில் இருந்து வாரணாசி மற்றும் கத்ரா வரை, இரண்டு வந்தே பாரத் அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பட்ஜெட் அறிவிப்பானது, என்ஜின்கள் இழுத்து செல்லும் ரயில்களுக்கு மாறாக, தானாக இயக்கப்படும் ரயில்கள் மூலம், இந்தியாவின் நூற்றாண்டு பழமையான ரயில்வே அமைப்புக்கு புதிய மாற்றத்திற்கான வழியாக திகழ்கிறது. 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்குள் இந்தியா முழுவதும் 75 வந்தே பாரத்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வந்தே பாரத் என்றால் என்ன

வந்தே பாரத் என்பது செமி அதிவேக ரயில் ஆகும். 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலை இயக்கிட இன்ஜின் தேவையில்லை. விநியோகிக்கப்பட்ட இழுவை மூலம் செயல்படுகிறது. இதில், பல இழுவை மோட்டார்கள் மூலம் ரயிலில் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. என்ஜின் இழுத்துச் செல்லும் ரயில்களுடன் ஒப்பிடும்போது விநியோகிக்கப்பட்ட இழுவை ரயிலுக்கு அதிவேகத்தில் பயணிக்க்ககூடியது.

10 நிறுத்தங்களுடன் 500 கிமீ பயணத்தில், ஒரு வழக்கமான ரயில், இந்த ரயிலுடன் ஒப்பிடுகையில் அதிக நேரத்தை எடுக்கிறது. வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. பயண நேரம் குறைவதன் மூலம், இந்த ரயில் பல முறை ட்ரீப் அடிக்க உதவியாக அமைகிறது.

தற்போதைய வந்தே பாரத் ரயில்களில் chair car and executive chair car என இரண்டு பிரிவு மட்டுமே உள்ளது. ரயில்வே ஏற்கனவே 102 புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது தற்போதைய இரண்டு வந்தே பாரத் ரயில் பெட்டிகளை காட்டிலும் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும்.

பொருளாதாரம்

நிர்மலா ​​சீதாராமனின் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிவிப்பு, அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 50,000 கோடி முதலீட்டை மேற்கொள்ளும்.

2018 இல் 16 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் ரூ.106 கோடியில் தயாரிக்கப்பட்டது. தற்போது, வரவிருக்கும் ரயிலில் மேம்படுத்தபட்ட அம்சம் பொருத்தப்படுவதால், விலை சற்று அதிகமாக இருக்கக்கூடும்.

இன்டக்ரல் கோச்சின் முன்னாள் ஜிஎம் சுதன்ஷு மணி கூறுகையில், ” 400 ரயில்களை மூன்று ஆண்டுகளில் உருவாக்க முடிந்தால், நிச்சயம் 10,000-15,000 வரை கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கம் இருக்கும். நாட்டின் ரோலிங் ஸ்டாக் துறையில் சுமார் ரூ. 50,000 கோடியை முதலீடு செய்யவுள்ள நிலையில், ஆண்டுக்கு ரூ. 10,000 கோடியாக எடுத்துக் கொண்டாலும், உதிரிபாக உற்பத்தி, விநியோகம் போன்ற துறைகளில் ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கிறது என்றார்.

பட்ஜெட் அறிவிப்பை “புதிய இலக்கு” என்று அழைத்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆரம்பத்தில் அறிமுகப்படுத்த மொபைல் போன்களின் அடுத்த பதிப்பு வருவது போல், வந்தே பாரத் ரயில்களுக்கு மேம்படுத்தப்படும் என்றார்.

தயாரிப்பில் ரயில் பெட்டிகள்

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மேதா சர்வோ டிரைவ் நிறுவனம், தயாரித்த 44 புதிய வந்தே பாரத் ரயில்களுக்கான மொத்த பெட்டிகள், இந்த ஆண்டு மே மாதம் முதல் விநியோகிக்கப்படவுள்ளது. முதலாவது மே மாதத்திலும், இரண்டாவது ஜூன் மாதத்திலும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.

ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில், ICF சென்னை, MCF ரேபரேலி மற்றும் RCF கபுர்தலா ஆகிய மூன்று உற்பத்தி பிரிவுகளில் மாதத்திற்கு 5-7 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

இந்த ரயில்களில் சிறந்த இருக்கைகள், ஏசியில் பாக்டீரியா எதிர்ப்பு அமைப்பு, குறைந்த சத்தம், 140 வினாடிகளில் 160 கிமீ வேகத்தை எட்டும் திறன் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

அடுத்த கட்டமாக 58 ரயில்களுக்கான டெண்டர் அறிக்கை விடப்பட்டுள்ளது. மேதா, சீமென்ஸ், பிஹெச்இஎல், டிதாகர் வேகன்ஸ் மற்றும் பாம்பார்டியர் உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தற்போது உட்கார்ந்த அமைப்பிலே வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த பேட்சில் நீண்ட தூரம் பயணத்திற்கு ஏற்றப்படி படுக்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படுவுள்ளது.

400 புதிய ரயில்கள்

400 புதிய ரயில்களுக்கு சிறந்த செயல்திறன் கொண்டதாக இருக்கும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் பெட்டிகளில் எஃகுக்குப் பதிலாக அலுமினியத்தைக் கொண்டு தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அலுமினிய அமைப்பு மூலம் ஒவ்வொரு ரயில் பெட்டியையும் தற்போதைய வந்தே பாரத் எடையை விட 40-80 டன் குறைவாக தயாரிக்க முடியும். இது குறைந்த அளவில் என்ர்ஜி பயன்டுத்திக்கொண்டு, அதிக வேகத்தை வழங்கிடும்.

அலுமினியப் பெட்டிகளை தயாரிக்கும் முயற்சியில் இந்தியா இதுவரை இறங்கவில்லை. ஏனெனில் அவை எஃகுவை விட விலை அதிகமாகும். அலுமினியம் உபயோகிக்கப்பட்டால், ஒரு வந்தே பாரத் ரயிலுக்கு சுமார் 130 கோடி ரூபாய் செலவாகும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த எரிபொருள் சேமிப்பு அதிகரிக்கும் என பொறியாளர்கள் கூறுகின்றனர். குறைந்த சத்தத்துடன் ரயில் வருவதால், அதில் மக்களது பயணித்தின் தரம் உயர்கிறது.

மணிக்கு 250 கிமீ வேகத்தை ரயில்வே எதிர்பார்க்கிறது. இருப்பினும், அதற்கு, நாடு முழுவதும் உள்ள தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.

இலக்கை நோக்கி

ரயில்வேயில், 400 ரயில் பெட்டிகள் தயாரிக்கும் இலக்கை, மூன்றாண்டுகளில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக ரயில் பெட்டி தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இலக்கை அடைவதற்கு, ரயில்வே அனைத்து வளங்களையும், உந்துவிசை அமைப்பை வழங்குவதற்கும், அசெம்பிள் செய்வதற்கும் பல நிறுவனங்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று தொழில்துறையினர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.

இந்திய தொழில் கூட்டமைப்பில் ரயில்வே உபகரணங்கள் பிரிவு உறுப்பினர் திலக் ராஜ் கூறுகையில், தொழில்துறை நிறுவனம், ரயில்வே உற்பத்தி பிரிவு இரண்டும் ஒருங்கிணைப்புடன் பணியாற்ற வேண்டும். வளங்களை சரியான நேரத்தில் ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடர் கண்காணிப்பு மூலம் குறுகிய காலத்தில் ரயில்களை இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் என தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளில் ஆர்டரை முடிக்க பல நிறுவனங்களை ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பிட்ட காலத்தை பார்க்கையில், இது ஒரு வீரரின் வேலை போல் தெரியவில்லை. ஆனால் முடியும், ஒரே நேரத்தில் பலர் இணைந்தால், செய்ய காட்ட முடியும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.