மார்ச் 31க்குள் ‘இதை’ செய்ய மோடி அரசு முடிவு..! #IDBI #LIC

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் இருக்கும் பட்ஜெட் பற்றாக்குறையைத் தீர்க்கும் வரையில் இரண்டு முக்கியமான விஷயத்தை மார்ச் 31ஆம் தேதிக்குள் செய்ய முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ரீடைல் பங்கு முதலீட்டாளர்களுக்கும் பலன் அடைவது மட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கும் அதிகப்படியான நன்மைகள் உள்ளது.

வரலாற்று உச்சத்தைத் தொட காத்திருக்கும் வரி வசூல்.. மத்திய அரசு செம ஹேப்பி..!

 IDBI பங்குகள் விற்பனை

IDBI பங்குகள் விற்பனை

மத்திய அரசு விரைவில் IDBI பங்குகளை விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது. IDBI வங்கியில் அனைத்து பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யவில்லை என்பதையும் மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை-யின் (DIPAM) செயலாளர் துகின் காந்த பாண்டே உறுதிப்படுத்தி உள்ளார்.

 எல்ஐசி ஐபிஓ

எல்ஐசி ஐபிஓ

இதுமட்டும் அல்லாமல் அடுத்த வாரம் மத்திய அரசு லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் (எல்ஐசி) மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான DRHP அறிக்கையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாகச் செபி-யிடம் சமர்ப்பிக்க உள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் எல்ஐசி ஐபிஓ கட்டாயம் வெளியாகும் எனத் தெரிகிறது.

 IDBI வங்கி நிர்வாக ஆதிக்கம்
 

IDBI வங்கி நிர்வாக ஆதிக்கம்

தற்போது IDBI வங்கியின் 49.24 சதவீத பங்குகள் எல்ஐசி-யும், 45.48 சதவீத பங்குகள் மத்திய அரசும், 5.29 சதவீத பங்குகள் ப்ரோமோட்டர் அல்லாத பங்குதாரர்கள் வைத்துள்ளனர். இதில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளது. இந்த விற்பனை மூலம் IDBI வங்கியின் மொத்த நிர்வாக ஆதிக்கமும் எல்ஐசி நிர்வாகத்திடம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ரூ.15-20 லட்சம் கோடி மதிப்பீடு

ரூ.15-20 லட்சம் கோடி மதிப்பீடு

நடப்பு நிதியாண்டின் முடிவுக்குள் கட்டாயம் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு உள்ள எல்ஐசி நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 15-20 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்த ஐபிஓ-வுக்குப் பின்பு 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருக்கும் டிசிஎஸ் நிறுவனமும் 2வது மற்றும் 3வது இடத்திற்குத் தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi Govt plans sell IDBI Bank stake, LIC DRHP submitting for next week

Modi Govt plans sell IDBI Bank stake, LIC DRHP submitting for next week மார்ச் 31க்குள் இதைச் செய்தாக வேண்டும்.. மோடி அரசின் 2 முக்கியத் திட்டம்..!

Story first published: Friday, February 4, 2022, 14:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.